மத்திய துணை ராணுவ (சி.ஆர்.பி.எஃப்) வீரர்கள் மீது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா அருகே நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. நமது வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது. ஒட்டுமொத்த தேசமும் தோளோடு தோள் நின்று அந்த தீரம்மிக்க உயிர்தியாகிகளின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. காயம்பட்டவர்
கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
– பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
ஜெய்ஷ் எ முகம்மது என்ற தன்னுடைய பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்துகொண்டு பாகிஸ்தான் இப்படியொரு கடுமையான குற்றம் புரிந்திருக்கிறது.
பாரதம் முழுவதும் இந்த பயங்கரவாத செயலை கண்டனம் செய்கிறது. இந்த கொடிய குற்றத்திற்காக பாகிஸ்தானுக்கு பாரதம் சரியான பதிலடி கொடுக்கும் என்றார் பாரத உள்துறை அமைச்சர்.
– மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். கோழைத்தனமான இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது.
– ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப் படவேண்டும். உயிர் தியாகிகளின் குடும்பத்திற்கு எங்களது மனமார்ந்த அனுதாபங்கள்.
– ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி
இஸ்லாமிய பயங்கரவாதம் வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்கப் பட வேண்டிய தருணம் இது. இந்தத் தாக்குதல் பாரதத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கை மட்டுமல்ல; உலகம் முழுவதும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பாகிஸ்தான் இதில் தனிப்படுத்தப்பட்டு நிற்கிறது.
– ஹிந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம கோபாலன்