முதல்வர் வீடியோ சர்ச்சை

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன். சிகிச்சைக்குப் பிறகு கேரளா திரும்பவிருந்த அவர், சில நாட்கள் துபாயில் தங்க முடிவு செய்தார். துபாயில் தரையிறங்கிய விஜயன், கருப்பு பேண்ட் வெள்ளை முழுக்கை சட்டை அணிந்து விமான நிலையத்தில் இருந்து வெளியே சென்றார். இந்த வீடியோவை அவரின் உதவியாளராக பணிபுரியும் ஊழியர் மணிக்குட்டன், மாநில தலைமை செயலகத்தில் உள்ளவர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். எப்போதுமே வெள்ளை வேட்டி சட்டையுடன் காட்சியளிக்கும் அவரை பேண்ட் சட்டையுடன் காட்டியதால் கோபமடைந்த கேரளாவை ஆளும் கம்யுனிச அரசு, முதல்வரின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி மணிகுட்டனை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. தலைமை செயலக ஊழியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.