முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் செய்த நலத் திட்ட பணிகளில் குறிப்பிடத்தக்க அம்சம் மழை நீர் சேகரிப்பு திட்டம் . தமிழகத்தை பொறுத்த வரையில், தென் மேற்கு பருவமழை ஜூலை ,ஆகஸ்ட்டு மாதங்களில் தமிழகத்தின் கன்னியாகுமாரி, நெல்லை , தேனி ,நீலகிரி ,கோயம்புத்தூர் மாவட்டங்களில் பெய்கிறது. செப்டம்பர், அக்டோபர் ,நவம்பர் மாதங்களில்அனைத்துதமிழக மாவட்டங்களில் வட கிழக்கு பருவ மழையும் பெய்கிறது . இந்த பருவமழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை சேமித்து தமிழ்நாட்டின் பல மாவட்ட விவசாயிகள் தங்களது விவசாயப்பணிகளை செய்து வருகின்றனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கிராமங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை தேடி இடம் பெயரும் மக்களின் வருகை காரணமாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது. இந்த மக்கள் நெருக்கத்தின் காரணமாக விவசாய நிலங்களில் வீடுகட்டியும்
அனைத்து ஏரிகள் குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் வாழ்விடங்களாக மாறிவிட்டது. அதனால் சாதாரணமாக மழை நீரை தேக்கிவைக்கும் நீராதாரங்கள் பலவற்றை இன்று நாம் இழந்து விட்டோம். விளைவு, மழைக் காலங்களில் இயற்கை அளிக்கும் அருட்கொடையான தண்ணீரை சேமித்து வைக்க போதுமான அளவுக்கு ஏரிகள் குளங்கள் இல்லை. அதனால் சாதாரண இரண்டு நாள் மழைக்கே சென்னையின் தெருக்களிலும் ,வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து விடுகிறது
இதுஒருபக்கம் என்றால் ஏப்ரல் மே ,ஜூன் மாதங்களில் குடிநீருக்கே அல்லல் படும் அவலமும் அரங்கேறி வருகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டுவர கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட வீராணம் குடிநீர் திட்டத்தை சற்று மாற்றி அமைத்து கடலூரில் இருந்து வீராணம் ஏரியில் இருந்து நீரை ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வந்து மக்களின் தாகம் தீர்க்கும் திட்டமும் செயல்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் எரிகளான செம்பரம்பாக்கம் புழல் ,பூண்டி நீர்தேக்கங்களும் ஓரளவு கைகொடுக்கிறது. இவை எல்லாம் தவிர ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதிநீர் தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 டி எம் சி தண்ணீரை வழங்கி வருகிறது இத்தனை திட்டங்கள் இருந்தும் சில சமயங்களில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது .சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு அதல பாதளத்தை நோக்கி சென்று விட்டது .நிலத்தில் நீர் இருந்தால் தானே போர்வெல் மூலமாவது தண்ணீரை பெறமுடியும்? ஒருகாலத்தில்ஐம்பது அடிஆழத்திற்கு போர் போட்டாலே தேவையான அளவுக்கு கிடைத்து வந்த நிலத்தடி நீர் இன்று 350 ,400 அடிவரை தோண்டியும் தண்ணீர் இல்லை அல்லது கடலுக்கு நேரடி கனெக்ஷன் கொடுத்தது போல உப்புக்கரித்துக் கொண்டிருக்கிறது . இந்த நிலைக்கு கரணம் யார் சென்னை வாசிகளின் சுய நலமே பிரதான காரணம்
முன்பு அரசியல் வாதிகளின் துணையோடு ஏரி குளங்களை ஆக்கிரமித்து வீடுகளை கட்டினார்கள் பின்பு ஒரு அடி நிலம் கூட விடாமல் அத்தனையையும் கான்கீரிட் காடுகளாக மாற்றினார்கள். எந்த அளவுக்கு என்றால் வீட்டின் வாசல் படி கூட அரசாங்கத்தில் ரோட்டில் வருமளவுக்கு சுயநலம் . விளைவு மழைநீர் நிலத்துக்குள் செல்லமுடியாத அளவுக்கு கழிவு நீர் கால்வாய் வழியே கூவத்தில் கலந்து அது அப்படியே கடல் நீரில் கலக்கிறது. எங்காவது நீர் சேகரிக்கப்பட்டால்தானே பூமியில் இருந்து திரும்ப பெறுவதற்கு அதற்கு வழியே இல்லாமல் செய்து விட்டு தண்ணீர் வேண்டும் என்றால் எப்படி கிடைக்கும் . ஏதாவது சேமிப்பு இருந்தால்தானே கஷ்ட காலத்தில் செலவு செய்ய கிடைக்கும் ? சேமிப்பே இல்லாது செலவு மட்டும் செய்வது எப்படி. இந்த அடிப்படை காரணத்தை நன்றாக உணர்ந்ததால்தான் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டுவந்தார் ஜெயலலிதா .
இந்த திட்டம் ஓரளவுக்கு சென்னையின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது .பின்னர் வந்த அரசுகள் அந்த திட்டத்தை கட்டாயப் படுத்தாதன் விளைவு, தற்போது மீண்டும் நிலத்தடி நீர் மட்டம் பழைய நிலையை விட மோசமாகி போய்விட்டது . இதனை சரி செய்ய நம் ஒவ்வொரு வீட்டிற்கும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒப்புக்காக செய்யாமல் சரியானபடி விதிமுறையை பின்பற்றி அமைக்க வேண்டும் . மேலும் புதிதாக கட்டப்படும் கட்டடங்களுக்கு மட்டுமின்றி அனைத்து வீடுகளுக்கும் இந்த திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் . பொதுமக்களுக்கு பாடம் எடுக்கும் அரசுகள் தங்களது அரசு கட்டடங்களிலும் சாலைகளிலும் மேம்பாலங்களின் அடியிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் ஒரு நல்ல அரசு மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்கி கொண்டிருக்காமல் தானே முன்வந்து முன்மாதிரியாக நடந்து காட்ட வேண்டும் மேலும் பல இடங்களில் தேவையற்று பயன்படுத்தப்படாத நிலங்களையும் பள்ளமாக உள்ள இடங்களை மழை நீர் சேகரிப்பு மையங்களாக மாற்ற வேண்டும். சென்னை உட்பட தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கோயிலின் குளங்களை தூர்வாரி அவற்றில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்ய வேண்டும் . ஏற்கனவே ஆக்கிரப்பின் பிடியில் சிக்கி இருக்கும் முக்கிய ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பினை மக்களின் நலனை கருத்தில் கொண்டு அகற்ற வேண்டும் . இவை எல்லம் ஓரளவிற்கு தமிழக மக்களின் குடிநீர் பஞ்சத்தையும் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் உயர வழிவகை செய்யும். நல்லதொரு சமுதாயம் தனது தேவைகளை சுருக்கிக்கொண்டு எதிர்கால சந்ததிகளுக்கு சேமித்து வைத்துவிட்டு போவதுதான் ஹிந்து வாழ்வியல் பண்பு .மாறாக மேலைநாட்டு கலாச்சாரமான அத்தனையையும் அணுபவி கடன்வாங்கி செலவு செய் என்பதுபோன்று நாமும் செயல்பட்டால் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை நாமே கேள்விக்குறியாக்கி விடுவோம் என்பதனை உணர வேண்டும்.