மின்சார வாகன சார்ஜிங் மையங்கள்

மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் (பி.ஜி.சி.ஐ.எல்), நவி மும்பையில் எப்.எம்.இ இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை அமைப்பதற்கான முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பி.ஜி.சி.ஐ.எல் மற்றும் நவி மும்பை மாநகர போக்குவரத்து (என்.எம்.எம்.டி) இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் செயல்படுத்த 24 மாதங்களில் செயல்படுத்தப்படும். இதில் சார்ஜிங் நிலையத்துடன் இணைந்து, மேற்கூரை, கழிப்பறை போன்ற உள்கட்டமைப்புகளும் நிறுவப்படுகிறது. கடந்த மாதம், பி.ஜி.சி.ஐ.எல் மேகாலயாவின் ஷில்லாங்கில் 11 மின்சார சார்ஜிங் நிலையங்களை நிறுவி வருகிறது. அவற்றில் ஐந்து பொது இடங்களிலும் மற்றவை அரசு நிறுவன வளாகங்களிலும் நிறுவப்படுகின்றன. பி.ஜி.சி.ஐ.எல், ஏற்கனவே கொச்சி, பெங்களூரு, குருகிராம், அகமதாபாத், டெல்லி, பெங்களூரு போன்ற பல நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை இயக்கி வருகிறது.