கோவை சுந்தராபுரம் சாரதாமில் சாலையில் உள்ள அரசன் திரையரங்கில் நடிகர் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கு திரைப்படம் பார்க்கவரும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வழிமறிக்கும் காங்கிரஸ்காரர்கள், உங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம் கொடுங்கள் காங்கிரஸ் உறுப்பினராக இணைந்தால் டிக்கெட் இலவசமாக தருகிறோம் என்று கட்சிக்கு ஆள்சேர்த்து வருகின்றனர். எத்தனை பேர் ஆதார் கார்டு எடுத்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் டிக்கட் இலவசமாக தருகிறோம் என்று பேசி ஆள் பிடிக்கின்றனர். ஒரு காலத்தில் கட்சி தொண்டர்களை வைத்து பிரம்மாண்ட மாநாடுகள் நடத்திய கட்சி, தற்போது மாநாடு படம் பார்க்க வருபவர்களை கட்சியில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திருணமூல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான, ‘ஜகோ பங்ளா’வின் தலையங்கத்தில் ‘நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் இப்போது மிக ஆழமான ஐஸ் பெட்டியில் உறைந்து போயுள்ளது. பா.ஜ.க’வை எதிர்த்து போராட காங்கிரசிடம் சக்தியும் இல்லை; தைரியமும் இல்லை’ என கூறப்பட்டுள்ளது நினைவுக்கு வருகிறது.