ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
அக்னி நட்சத்திர காலமான, 30 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அணைகளில் போதிய நீர் இல்லாததால் மின் உற்பத்தி நிறுத்தம்; வாரத்துக்கு, மாதத்துக்கு ஒருமுறை மக்களுக்கு குடிநீர் வினியோகம் போன்றவற்றை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. இதற்கெல்லாம், ஒற்றை தீர்வு மழை மட்டுமே; வேறு வழி இல்லை.
சித்திரை அமாவாசையான மே 7ம் தேதி அனைத்து மக்களும் தங்கள் இஷ்ட தெய்வம், குல தெய்வம், முன்னோர்களை நினைத்து நம் பகுதியில் உள்ள அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று அனைவரும் நலமுடன் வாழ, மழை மும்மாரி பொழிந்திட இறைவனை ஒன்று சேர்ந்து வேண்டுவோம். பக்தியால் இறைவனை குளிர்வித்தால், நம் மண்ணை குளிர்விப்பார் என்ற நம்பிக்கையுடன் இறைவனை வழிபடுவோம்; மழை பெறுவோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.