குடியுரிமை மசோதாவிற்கு எதிப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டம் குறித்து பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தெரிவித்த கருத்து
1947 ல் நாடு துண்டாடப்பட்ட போது அன்றே பாகிஸ்தானிலிருந்து ஹிந்துக்கள் பாரத நாட்டிற்க்கு (சொந்த நாட்டிற்க்கு) அகதிகளாக வந்தனர். அதற்கு பிறகும் கூட பல்வேறு காலகட்டத்தில் பாரத நாட்டிற்க்கு ஹிந்துக்கள் அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர் . அவர்கள் பஞ்சாப், அசாம், டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் தஞ்சமடைந்தனர். இவர்கள் எல்லாம் அந்த நாட்டின் பெரும்பான்மை முஸ்லிம் மதத்தவரால் துன்புறுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்கள் அதே காலகட்டத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்ட ரீதியில் நாட்டில் தங்களது பெரும்பான்மையை கூட்டஊடுருவி வந்தவர்களையும் ஒன்றாக பார்க்க கூடாது. ஊடுருவி வந்தவர்கள் அசாம் மாநிலத்தை இஸ்லாம் மாநிலமாக அறிவிக்க பலவிதமான கோரிக்கை வைத்தனர். அப்போது அகதிகளாக வந்த ஹிந்துக்கள் இங்கே இருக்கும் வரை இது எடுபடாது என்று உணர்ந்தனர்.
தற்போது கொண்டுவந்துள்ள சட்ட திருத்தம் மதத்தின் அடிப்படையில் கொண்டு வந்த சட்டமா என்று கேள்வி கேட்போருக்கு மதத்தின் அடிப்படையில் ஒரு நாட்டேயே துண்டாடிய போது தற்போது நாட்டை பாதுகாக்க ஒரு சட்டம் கொண்டு வர கூடாதா? இஸ்லாமியர்களுக்கு என்று ஒரு நாடே கொடுக்கபட்ட போது ஏன் அவர்களுக்கு இங்கு குடியுரிமை கொடுக்க வேண்டும்.
மசோதா நிறைவேற்றபட்டற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் என்று ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. ஆனால் அது உண்மை இல்லை. போராட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ராமஜென்ம பூமி, காஷ்மீர் 370 போன்ற விவகாரத்தில் எந்த அளவுக்கு முன் எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்தார்களோ அதே போல் இந்த விவகாரத்தில் எடுத்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இப்போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இலங்கையில் இருந்து வந்த அனைவரும் இங்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் குடியுரிமை வேண்டும் என்றும் ஒருபோதும் கேட்டது இல்லை. இலங்கையில் அமைதியான சூழ்நிலை ஏற்பட்ட உடன் அங்கு சென்று விடுவோம் என்ற நோக்கத்தில் தான் இன்றும் இருந்து வருகின்றனர். அவர்கள் வரும் போது பாதுகாப்பு கேட்டார்கள். பாரத தேசம் அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்தது.
வடநாட்டில் இருந்து இங்கு வந்து வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள். என்று கோசம் போடும் திருமா, திருமுருகன் காந்தி, சீமான், வைகோ, அவர்கள் தான் இப்போது இலங்கை அகதிகளுக்கும், ரோஹிங்கிய முஸ்லிம்களையும் குடியுரிமை கேக்கும்நிலையில் அவர்கள் தன்னுடைய வீட்டில் அவர்களை தங்க வைத்து கொள்ளுவார்களா? நாடு துண்டாடபட்ட போதும் அகதிகளாக வந்த ஹிந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது தான் அப்போதைய காங்கிரசின் கருத்தக இருந்தது.
வன்முறையில் ஈடுபட்ட இயங்களிடம் இருந்து அந்த சேதத்திற்காக தொகையைஅந்த அமைப்புகளிடம் இருந்து நஷ்ட ஈடு வசூலிக்க வேண்டும்.என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்புஉள்ளது அதனடிப்படையில் அந்த வன்முறை இயக்கங்களிடம் இருந்து சேதமதிப்பு தொகையை வசூலிக்க வேண்டும் அவர்கள் கட்ட மறுத்தால் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலமே இவர்களின் கொட்டத்தை வன்முறையை அடக்கமுடியும் .அரசு தனது கருத்தில் உறுதியாக இருந்து தேசவிரோத சக்திகளை ஒடுக்க வேண்டும்.