மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்ற ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர மத்திய அரசு பணியாளர்களுக்கு இருந்த தடையை மத்திய அரசு நீக்கியதை வரவேற்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கை
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் கடந்த 99 ஆண்டுகளாக தேச புனரமைப்பு மற்றும் சமுதாய சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, பன்முகத்தன்மை காப்பது மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சமுதாயத்துடன் சேர்ந்து சங்கம் செய்துள்ள சேவைகளை, தேசத்தின் பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
தங்கள் சுயலாபத்திற்காக அப்போதைய அரசு, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்தது. மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை மிக பொருத்தமானது மற்றும் ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கிறது.