மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் ஐஐடி இயக்குனர் காமகோடி

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது. மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஓர் உறுப்பினராகவும், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் வி.காமகோடி நியமிக்கப்படுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.