துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த வாலிபரை, ஒருவர் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால், 10 கோடி ரூபாய் தருவோம்’ என, அவர் கூறி உள்ளார்.
அதற்காக, அமெரிக்காவில் வங்கி கணக்கு துவங்க, வருமான வரி செலுத்த உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டுள்ளார். அந்த வாலிபர், ‘கூகுள் பே ஆப்’பில், 4.88 லட்சம் ரூபாய் அனுப்பினார்.
சில நாட்களில், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, தஞ்சாவூர் மாவட்டம், ஆனந்தம் நகரைச் சேர்ந்த ராஜவேல், 31, என்பது தெரிந்தது. அவரை ‘சைபர் கிரைம்’ போலீசார் கைது செய்தனர்.