நமது புராணங்களும், இதிகாசகங்களும், தர்ம சாஸ்திரங்களும் காலங்கடந்தவை. இந்த புண்ணிய பூமியின் சிறப்புகளை எடுத்துரைத்துக் கொண்டே இருக்கும் புராணங்களும், இதிகாசங்களும், தர்ம சாஸ்திரங்களும், கிறிஸ்தவ பாதிரிகளுக்கு உறுத்தலைக் கொடுத்தன. பாரததத்தில் மதமாற்றத்தை அதிகரிக்க வேண்டுமானால், தொன்மையான சுவடிகளை அழித்
தொழிக்க வேண்டும்.இதை முழுமையாக செய்ய முடியாத நிலையில், சுவடிகளில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கு தவறாக விளக்கம் அளிக்க வேண்டும்.உண்மையான பொருளை சிதைக்க வேண்டும்.இதையெல்லாம் செய்தால்தான் கிறிஸ்தவத்தை வேகமாக பரப்ப முடியும் என்பதுதான் பாதிரிகள் போட்ட கணக்காகும்.
இந்த விஷமத்தனமான பாதிரிகளின் வழித்தடத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் ஏராளமானோர் பயணித்துள்ளனர்.இவை இன்றளவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.ஜோசப்போடன் என்பவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இருக்கையை உருவாக்க நிதியுதவி செய்தார்.அவர் தனது உடைமைகள் யாவற்றையும் இதற்காக வாரி வழங்கினார்.அவர் கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்து பெரும் பொருள் ஈட்டியவர் ஆவார்.இந்த இருக்கை எதற்காக உருவாக்கப்
பட்டது என்றால், பாரதத்தில் உள்ள மக்களை எவ்வளவு வேகமாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய முடியுமோ?அவ்வளவு வேகமாக மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.
ஜோசப் போர்டன் 1811ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி உயில் எழுதி வைத்
துள்ளார்.பாரதம் சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியாகும்.இரண்டு நிகழ்வுகளும் ஒரே தினத்தின்தான் நடந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள தவறக்கூடாது.
‘‘நான் ஈட்டிய செல்வம் அனைத்தையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத இருக்கை அமைப்பதற்காக மனப்பூர்வமாக அளிக்கிறேன்.இந்த இருக்கையின் பிரதான நோக்கம் பாரதத்தில் உள்ளவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதுதான்.இதற்கு சமஸ்கிருதத்தை தந்திரமாக பயன்படுத்த வேண்டும். இல்லாததை இருக்கிறது என்றும், இருப்பதை இல்லை என்றும் மாயாஜாலம் காட்டி, மக்களை மயக்கி அவர்களை அவர்களது பூர்வீக தொடர்பு
களிலிருந்து அப்புறப்படுத்தி கிறிஸ்தவத்தை வலுவாக காலூன்ற வைக்க வேண்டும்’’ என தனது உயிலில் ஜோசப் போடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலேயே மிகவும் பழமையானது இந்த ஜோசப் போடனால் நிறுவப்பட்ட சமஸ்கிருத இருக்கைதான்.1827ல் இந்த இருக்கை முறைப்படி செயல்படத் தொடங்கியது.இதன் முதலாவது தலைவர் ஹோரேஸ்ஹேமன் வில்சன் ஆவார்.இவர் 1832ம் ஆண்டு இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது நியமனப் பதவி அல்ல. போட்டியின் அடிப்படையில்தான் தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோரேஸ்ஹேமன் வில்சனுக்குப் பிறகு சர் மோனியர் மோனியர் வில்லியம்ஸ் இப்பதவிக்கு வந்தார்.இந்த வழித்\தடத்தில் பேராசிரியர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர்.அண்மைக்காலத்தில் தாமஸ் பரோ, ரிச்சர்ட் ஹோம்பிரிச் ஆகியோர் பாரதத்துக்கு எதிராக வக்கிரமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளனர்.ஜோசப் போடன் மறைந்து விட்ட போதிலும் அவர் வகுத்து கொடுத்த மோசமான சதித்திட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
1860ம் ஆண்டு வரை ஹோரேஸ்ஹேமன் வில்சன் சுமார் 28 ஆண்டுகள் பணியில் நீடித்துள்ளார்.1860ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சர் மோனியர் மோனியர் வில்லியம்சும், மேக்ஸ் முல்லரும் மோதினார்கள்.இருவருமே கிறிஸ்தவத்தை வெகுவேகமாக பரப்ப எந்த அளவுக்கும் தில்லுமுல்லு செய்யலாம் என்பதில் நாட்டம் கொண்டவர்களே.1860ம் ஆண்டு நடைபெற்ற மேக்ஸ் முல்லரை சர் மோனியர் மோனியர் வில்லியம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற சர் மோனியர் மோனியர் வில்லியம்ஸ் “நான் எனது முழு சக்தியையும் இந்தியாவை கிறிஸ்தவ மயமாக்குவதற்காக பயன்படுத்துவேன்.சமஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள
வற்றை எனது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காகதுஷ்பிரயோகம் செய்வேன்’’ என்று கூறியுள்ளார்.
போட்டியில் தோல்வியடைந்தாலும் மதவெறியில் மேக்ஸ் முல்லரும் சளைத்தவர் கிடையாது.“மதமாற்றம் செய்வதற்காக சமஸ்கிருதத்தை அஸ்திர
மாக பயன்படுத்துவேன்.பாரதத்தில் விக்கிரக வழிபாடு இருக்கிறது.இதை நிர்மூலமாக்க வேண்டும்.சமஸ்கிருத சுவடிகள் பொய்யானவை.விவிலியம் மட்டுமே உண்மையானது.பாரதியர்களை பொய்மையிலிருந்து விடுவித்து கிறிஸ்தவர்களாக்குவதற்காக எந்த உபாயத்தையும் பயன்படுத்த தயங்க மாட்டேன்’’ என்று மேக்ஸ் முல்லர் கூறியுள்ளார்.
சர் மோனியர் மோனியர் வில்லியம்ஸ் எழுதிய மார்டன் இந்தியா அன்ட் தி இண்டியன்ஸ் என்ற புத்தகத்தில் விஷமத்தனத்தை அவர் கக்கியுள்ளார்.பக்கத்துக்கு பக்கம் பொய்களை அடுக்கியுள்ளார்.பிராமணீயத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எப்படியாவது பிராமணீயத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்டினால்தான் பாரததத்தில் கிறிஸ்தவத்தை வேகமாக பரப்ப முடியும் என்பதை அவர் சாசனமாகவே பதிவு செய்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் பூர்வகுடி மக்களை தந்திரமாக ஏமாற்றி, கிறிஸ்தவத்
துக்கு மதமாற்றம் செய்ததைப் போலவே இந்தியாவிலும் மதமாற்றத்தை துரிதப்படுத்த மோசமான நடவடிக்கைகள் அனைத்தையும் கிறிஸ்தவ பாதிரிகள் எடுத்தார்கள். இதற்கு பதவிகள் பயன்படுத்தப்பட்டன.வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது.
ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் போர் நடந்தது என்று சரடு திரிக்கப்பட்டது.கால்டுவெல் பாதிரியாரும், மேக்ஸ் முல்லரும்வெளிநாட்டி
லிருந்து பாரதத்துக்கு படையெடுத்து வந்தவர்கள்தான் ஆரியர்கள் என கட்டுக்
கதையை பரப்பினார்கள்.பாரதிய நாகரீகம் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இந்த தொன்மைகளையெல்லாம் பொருட்படுத்தாத கால்டுவெல் பாதிரியாரும், மேக்ஸ் முல்லரும் ஜாதியின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில், மொழியின் அடிப்படையில் இந்திய மக்களை பிளவுபடுத்த முற்பட்டனர். இந்த கொடூரம் இன்று வரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்வது துரதிருஷ்டமே.பாரத மொழிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்புடைவை. இந்த கருத்து வலுப்பெற்றால் மதமாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்ற அச்சத்தின் காரணமாகவே சமஸ்கிருதத்துக்கும் மற்ற பாரத மொழிகளுக்கும் இடையே வெறுப்புணர்ச்சியை, காழ்ப்புணர்ச்சியை கால்டுவெல் பாதிரியாரும், மேக்ஸ் முல்லரும் விதைத்தார்கள். இந்த
தளையிலிருந்து முற்றிலுமாக விடுபடுவதுதான் நமக்கு விடியலைத் தரும்.
கட்டுரையாளர்: முன்னாள் துணை வேந்தர், கெளதம புத்தா பல்கலைக்கழகம்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் :அடவி வணங்கி