மதமாற்றத்தை தடுக்க ஒரு நடை பயணம்

ஒரு பாதயாத்திரை அனுபவம்!

மீனாட்சிபுரத்திற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மதமாற்றம் முயற்சிகள் மும்முரமாக நடைபெற்றது. அந்த நேரத்தில் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள ஹிந்து ஒற்றுமை மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு பாதயாத்திரை 1981 ஜூலை மாதம் 17 முதல் 24 வரை நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், இந்து முன்னணி, இந்து ஆலய பாதுகாப்பு கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

ஒட்டுமொத்த மத மாற்றத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் அரபு நாடுகளில் இருந்து பெரும் பணத்தைக் கொண்டு நம்முடைய ஜாதி பூசல்களையும் சாதகமாக்கிக் கொண்டு நமது நாட்டின் 8 கோடி பட்டியல் சமூக ஹிந்துக்களையும் முஸ்லிம்களாக மாற்ற நடக்கும் சாதி திட்டத்தினை புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம் இந்நாட்டில் பெரும்பான்மையினர் ஆனால் முதலில் அழிக்கப்படுவது ஈவேரா சிலையும் தங்களுடைய தி.க இயக்கமுமே என்பதனை பகுத்து உணர தெரியாத பகுத்தறிவுவாதிகள் இந்த மதமாற்றத்தில் கிரியா யூக்கியாக செயல்பட்டதும் தெரிய வந்தது. வர்க்க மோதலுக்கு அடிப்படைவாத ஜாதி மோதல்களை தூண்டிவிட்டு அதனால் லாபமடைய நினைத்த கம்யூனிஸ்ட்களும் இதற்கு மறைமுக காரணமாக இருந்தனர்.

ஒவ்வொரு கிராமத்தில் உள்ள படித்தவர்களில் ஒரு சிலரையோ கிராமத்தில் முக்கியஸ்தரையோ முதலில் பணம் கொடுத்து தங்களின் வசமாக்கி முஸ்லிம்கள் அவர்களை ஏெஜண்டுகளாக பயன்படுத்தி கிராமம் முழுவதும் உள்ள அப்பாவி மக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. பாதயாத்திரை எட்டு தினங்களும் கிராம மக்கள் வழங்கிய உணவை உண்டு மகிழ்ந்து மதம் மாறியவர்களின் மதம் மாறாத பட்டியல் சமூக ஹிந்துக்களையும் சந்தித்து உரையாடினோம்.

மதம் மாறியவர்கள் கூறிய கருத்துக்கள்

பட்டியல் சமூக, ஜாதி ஹிந்துக்கள் இடையே மோதல் என்று ரேடியோவிலும் பத்திரிகைகளும் செய்தியில் வருகின்றனவே? அப்படியானால் நாங்கள் ஹிந்துக்கள் இல்லையா? நாங்கள் என்ன மதம் என்று தெரியாததால் எங்களுக்கென்று ஒரு மதமாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தோம்.

பிற சமூக ஹிந்துக்களின் கொடுமை அதிகமாக இருந்ததாலும் ராமநாதபுரத்தை சுற்றி நாங்கள்தான் மெஜாரிட்டி நாங்கள் நினைத்தால் அரை மணி நேரத்திலேயே அவர்களை எல்லாம் தீர்த்து கட்ட முடியும். ஆனால் இந்த போலீஸ்காரங்க எல்லாம் எங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்குறாங்க இந்த அரசும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இந்த ஜாதி இந்துக்களுக்கு சரியான பதில் கொடுப்பதற்காகவும் போலீஸ்காரர்களை எல்லாம் சமாளிக்கவும் தான் நாங்கள் இஸ்லாம் மதத்தில் சேர்ந்தோம். எங்களுக்காகவே போராடத்தான்  பக்கத்துல பாகிஸ்தான் நாடும் தயாராக இருக்கிறது என்று வீராவேசத்துடன் மேல மடையச் சேர்ந்த ஒரு இளைஞர் கூறினார்.

நாங்க எத்தனை காலத்துக்குத்தானுங்க சோற்றுக்கும் தண்ணிக்கும் கஷ்டப் படுவோம்? முஸ்லிம்களான பிறகு எங்களுக்கு வேண்டிய வசதி எல்லாம் சுலபமாக கிடைக்குது எங்க ஊர்ல இருந்து எட்டு பத்து பேர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்காங்க. அங்கு இவ்வளவு கிடைக்கிறப்போ இன்னும் நாங்க ஏன் ஹிந்து மதத்தில் இருக்கணும் என்று ஒரு பெரியவர் கேட்டார்.

எந்த கிராமத்திலும் அரசியல் கட்சி கொடிகளை காணோம். மதம் மாறுவதற்கு முன் எல்லா கட்சி கொடிகளும்  இருந்தனவாம்.  இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது அதெல்லாம் அடுப்பு எரிக்க  போச்சுங்க. நாங்கல்லாம் இப்ப ஒரே முஸ்லிம் லீக் கட்சிதான் என்று அழுத்தமாக தெரிவித்தனர்.

மதம் மாறாத பட்டியல் சமூக ஹிந்துக்கள் தெரிவித்த கருத்துக்கள்

“நம்ம காளியாத்தாவை விட்டுட்டு அல்லா சாமியை மட்டும் எப்படிய்யா கும்பிட முடியும்? இதை காட்டிலும் சக்தியுள்ள தெய்வம் வேறு ஒன்று இருக்கிறதா? என்னையும் மதம் மாறித்தான் ஆகணும் கட்டாயப்படுத்தினாங்க. பக்கத்தில் இருக்கிற சமுத்திரத்தில் விழுந்து சாவுறது தவிர வேறு என்னங்க?” என்று 45 வயதான கனகம் என்ற வீராங்கனை உணர்ச்சியுடன் கூறிய போது அந்த அம்மாவின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினோம்.

எங்கே போனாலும் இந்த பாழாப்போன ஜாதி ஒழிய போறதில்லை. பயந்துட்டு ஓடி வந்தவன் என்று மரியாதை இருக்காது, தான் என்ன ஆனாலும் இங்கேயே இருக்க தீர்மானிச்சிட்டோம்.  மதத்தை மாத்திட்டா நம்ம பரம்பரை பழக்கம் மட்டும் மாறிடுமுங்களா?  நாமத்தான் எல்லா சாமியும் ஒண்ணுங்கறோம். அங்கே போன அல்லாவை தவிர வேறு சாமி இல்லையாம் நமக்கு அப்படி எல்லாம் இருக்க முடியாதுங்களே!

அப்போது கிடைத்த பிற அனுபவங்கள்

மதம்மாற்ற முயற்சி கடந்த இரண்டு வருடமாகவே அங்கு நடந்து வருவதாகவும் கீழக்கரை மற்றும் ராமநாதபுரம் நகரத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் அடிக்கடி காரில் கிராமங்களுக்கு வந்து சென்றதாக செய்திகள் கிடைத்தன.

தீக்கிரையான வீடுகள் பிற இந்துக்களிடையே பாதிக்கப்பட்ட வெள்ளா போன்ற கிராமங்களில் உள்ளவர்கள் மதம் மாறாததும் குறிப்பிடத்தக்கது. மேல்மடை, அத்தியூத்து, எலவனூர் போன்ற மதம் மாற்றம் நடந்துள்ள கிராமங்களில் கலவரம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவனூர் என்ற கிராமத்தில் செல்லும்போது ஒரு தெருவிற்குள் செல்ல முயன்றோம். அப்போது மதம் மாறிய ஒருவர் அந்தத் தெருவில் மசூதி இருப்பதால் எங்களை செல்லக்கூடாது என தடுத்தார். “இந்திய நாட்டில் எந்த தெரு வழியிலும் செல்ல உரிமை உண்டு நீ அவர்களை தடுக்க வேண்டாம்” என்று அதே ஊரைச் சேர்ந்த ராமன் என்பவர் மறுப்புக்குறி எங்களை அந்த வழியே அழைத்துச் சென்றார்.

ஒரு கிராமத்துக்குள் நுழைந்த போது நடுத்தர வயது உடைய ஒரு முஸ்லிம் பெண் ஒருவர் லிப்ஸ்டிக், வளையல் போன்ற பெண்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரம் செய்யும் வியாபாரி போல் தோன்றினர்.

அங்குள்ள பட்டியல் சமூக பெண்களிடம் ஹிந்து பெண்களிடம் இஸ்லாம் பற்றி இல்லாத பெருமை  எல்லாம் கூறி ஆசை வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள். எங்களை கண்டதும் தேள் கொட்டிய திருடன் போல் விழித்துக் கொண்டு அவசர அவசரமாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

அத்தியூத்து போன்ற கிராமங்களில் மதம் மாறியவர்கள் தங்களுக்கு உரிய பணம் இன்னமும் வந்து சேரவில்லை என்றும் சிறுவர்களுக்கு சுன்னத் செய்த பிறகு சரிவர கவனிக்கவில்லை என்றும் தாங்கள் எதிர்பார்த்த அந்தஸ்து கிடைக்கவில்லை என்பதாலும் முஸ்லிம்களின்  பேரில் கோபம் கொண்டு பின்னர் வருத்தப்படுவதையும் புரிந்து கொண்டோம். இன்னும் 40 ஆண்டுக்குப் பின்தான் சம அந்தஸ்து கிடைக்கும் என்றும் முஸ்லீம் கூறினார்களாம்

பட்டியல் சமூக ஹிந்துக்களுள் பறையர், பள்ளர், சக்கிலியர், என்று பல உட்பிரிவுகளில் அப்போது பள்ளர்கள் மட்டுமே மதம் மாறினர்.

27/7/81 அன்று ராமநாதபுரம் விவேகானந்தா திடலில் நடைபெற்ற ஹிந்து ஒற்றுமை நிகழ்ச்சி மாநாடு மதம் மாறியவர்களுக்கு ஏக்கத்தையும் மதம் மாறாதவர்களுக்கு ஒரு ஊக்கத்தையும் அளிப்பதாக அமைந்திருந்தது.

ஹிந்துக்கள் தமது சமயத்தையும் அதன் மூலம் நமது பாரத நாட்டையும் காக்க எல்லா தியாகமும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பதை உணரத் தலைப்பட்டு விட்டனர்.                   − எஸ்.ஸ்ரீனிவாசன்

1981,  ஆகஸ்ட் 14, விஜயபாரதம்
வார இதழிலிருந்து)

– தொடரும்.