”மண் குதிரை ஸ்டாலினை, முஸ்லிம்கள் நம்ப வேண்டாம்,” என, பா.ஜ., தேசிய செயலர், எச். ராஜா கூறினார்.
விழுப்புரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், சி.ஏ.ஏ.,வை கைவிட வேண்டும் எனக் கூறுகிறார். கடந்த, 2003ல் ராஜ்யசபாவில், காங்., கட்சியைச் சேர்ந்த மன்மோகன் சிங், கையெடுத்து கும்பிட்டு, ‘மூன்று நாடுகளில் இருந்து வந்துள்ள மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை கொடுங்கள்’ என, துணை பிரதமர் அத்வானியிடம் கேட்டார்.தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அறிமுகப்படுத்தியவர், 2010ல் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தான். தமிழகம் முழுவதும், அனுமதியில்லாமல் போராட்டங்கள் நடத்தி, வன்முறைகளை துாண்டுகிறார். தயவு செய்து, மண் குதிரை ஸ்டாலினை, முஸ்லிம் சகோதரர்கள் நம்ப வேண்டாம். முஸ்லிம்களை, ஸ்டாலின் துாண்டி விடுகிறார்.என்.பி.ஆர்., – சி.ஏ.ஏ., – என்.சி.ஆர்., சட்டங்களுக்கு ஆதரவாக, வரும், 28ம் தேதி தமிழகம் முழுவதும், ஊர்வலமாக சென்று, கலெக்டர் அலுவலகத்தில், பா.ஜ., சார்பில் மனு கொடுக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினர் என்றால், நாட்டிற்கு எதிராக செயல்பட்டால், வண்ணாரப்பேட்டை உட்பட, தமிழகம் முழுவதும், அனுமதி இன்றி போராட்டம் நடத்தலாம். ஆனால், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் என்றால், காவல்துறை கைது செய்து, எப்.ஐ.ஆர்., போடும். தமிழகத்தில், ஹிந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா… வெட்கக்கேடு. இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.