மக்களை சென்றடையும் நலத்திட்டங்கள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஐ.நா பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக வந்திருந்த நெதர்லாந்து ராணி மேக்சிமா குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து பேசினார். ராணி மேக்சிமாவை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா-நெதர்லாந்து இடையே இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். தண்ணீர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இருநாட்டு கூட்டாண்மை, சர்வதேச அளவிலான நிதிசார்ந்த நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அரசின் நலத்திட்டங்கள், எந்தவித தடையுமின்றி, கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில், ஒவ்வொரு இந்தியரையும் முறையான வங்கி வழியுடன் இணைப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளில் கடந்த சில வருடங்களாக பாரதம் அடைந்து வரும் வளர்ச்சியை ராணி மேக்சிமா பாராட்டினார்.