மக்களின் மருத்துவ செலவு குறைந்துள்ளது: பிரதமர்

 

மக்கள் மருந்தகத்தால், மக்களின் மருத்துவ செலவு குறைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். விக்ஷித் சங்கல்ப் யாத்திரை திட்டத்தின் கீழ் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி, பயனாளிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: அரசு திட்டங்கள் பயனாளிகளை உரிய நேரத்தில் மக்களிடம் சென்று சேரும் வகையில் திட்டமிடப்படுகிறது. மத்திய அரசின் மருந்தகத்தால் மக்கள் செலவு வெகுவாக குறைந்து உள்ளது. செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அடித்தட்டு மக்களை சென்று அடைய வேண்டும். அரசின் கொள்கையால் எம்.பி.,க்கள் போஸ்டர் அடிக்க அல்ல. என் வாக்குறுதிகளால் மக்கள் பயன் அடைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.