மகா பஞ்சாயத்தின் உள்நோக்கம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு, உத்தர பிரதேசத்தில், செப்டம்பர் 5ல் ‘மகா பஞ்சாயத்து’ நடத்தவும், செப்டம்பர் 27ல் ‘பாரத் பந்த்’ நடத்தவும் அழைப்பு விடுத்தது. அதன்படி நடைபெற்ற மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நடைபெற்ற அனைத்தும் அவர்கள் முன்பு போராட்ட கொள்கைகளுக்கு நேர் மாறாகவே இருந்தது. உதாரணமாக, வரும் தேர்தலில், உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் கட்சித் துவங்கி, பா.ஜ.கவை தோற்கடிப்போம் என மகா பஞ்சாயத்தில் தெரிவித்தனர். பா.ஜ.கவை தூற்றுவது மட்டுமே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால், போராட்ட துவக்கத்தின்போது, ‘இது விவசாயிகளின் போராட்டம், அரசியல் கலப்பற்றது, இது அரசியலில் ஈடுபடாது’ என அவர்கள் கூறியிருந்தனர். அதேபோல, ‘போராட்டத்தில் ஹர ஹர மஹாதேவ், அல்லாஹு அக்பர் என இரண்டு கோஷங்களும் எழுப்பப்படும்’ என கூறிய அதன் தலைவர் ராகேஷ் திகாயத், மேடையில் அல்லாஹு அக்பர் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்பினார். அவர்களின் இந்த செயல்கள், இப்போராட்டத்தின் இப்போராட்டத்திற்காக செலவு செய்பவர்கள் யார், அவர்களின் பின்னணி, உள்நோக்கம், இதனால் அவர்களுக்கு கிடைக்கப்போகும் ஆதாயம் என்ன என்பது குறித்து எடுத்துரைப்பதாகவே உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.