போலி ஊடகவாதிகள் உஷார்!

நவம்பர் 19, 2017 தேதியிட்ட  ‘ஜூனியர் விகடன்’ இதழுடன் 16 பக்க இணைப்பு புத்தகம் ஒன்று வெளியாகியது. இணைப்பு புத்தக அட்டையில் நித்யானந்த சுவாமிகளின் படம் போட்டு டாப் 10 மோசடி சாமியார்கள்” என்ற தலைப்பில் 10 சாமியார்கள் பற்றி எழுதியுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள சாமியார்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது வேறு விஷயம். ஆனால் ஹிந்து சாமியார்களைப் பற்றி தனிப்புத்தகம் போடும் விகடன் குழுமத்தினர் டாப் 10 மோசடி பாதிரியார்கள்” என்ற தலைப்பில் பாதிரிகளின் லீலைகளை வெளியிடுவார்களா? கன்னியாஸ்திரிகளை கற்பழித்த பாதிரி, கண் பார்வையற்றோர் விடுதியில்  தங்கி படிக்கும் பார்வையற்ற சின்னஞ்சிறு சிறுமிகளைக் கற்பழித்த பாதிரியார்கள் என தினசரி நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே! டாப் 10 முஸ்லிம் பயங்கரவாதிகள்” என்ற தலைப்பில் நாடு முழுதும் வெடிகுண்டுகளை வைத்த முஸ்லிம் பயங்கரவாதிகள் பற்றி இணைப்பு புத்தகம் போட தைரியம் உண்டா? முஸ்லிம், கிறிஸ்தவர்களைப் பற்றி வாய் திறக்க வக்கற்ற ஹிந்து விரோதிகளைக் கண்டித்து ஜூனியர் விகடன் அலுவலகத்தில் கடித, தொலைபேசி பதிவுகள் குவியவேண்டும்.

– காந்திமதி நடராஜன், சென்னை