பேப்பரும் கிடையாது அல்வாவும் கிடையாது

பாரத நாடாளுமன்ற வரலாற்றில், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு பட்ஜெட் தாக்கலில் பல புதுமைகள் செய்யப்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் ஒன்றிணைக்கப்பட்டது. சூட்கேஸில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட் ஒரு சிவப்பு நிறப் பையில் எடுத்து வரப்பட்டது. தற்போது கொரோனா அபாயம் இருப்பதால், அச்சகத்தில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு, புதுமை கருதி பட்ஜெட் அச்சடிப்பதை, மத்திய அரசு ரத்து செய்துவிட்டது. அதற்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பட்ஜெட் உரையை படிக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. எம்.பி.,க்களுக்கும், ‘சிடி, பென்டிரைவ், டேப்லட்’ போன்றவற்றில் பட்ஜெட் உரையை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல ஆண்டு மரபாக பட்ஜெட் அச்சடிக்கும்போது அல்வா கிண்டப்படும். அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.