பெண் குழந்தைகள் பாதுகாப்பு

பெண் குழந்தைகளின் உரிமைகளை பிரபலப்படுத்தவும் அவர்களின் கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உட்பட பெண் குழந்தைகள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை அதிகரிக்கவும் தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று ‘பெண் குழந்தை பாதுகாப்பு’குறித்த இணையவழி கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா, ஹரியானாவின் முன்னாள் அமைச்சர் ஓ.பி.தங்க்கர், குழந்தைகளைப் பாதுகாப்போம் இயக்கத்தின் தலைவர் பிரக்யா வாட்ஸ் ஆகியோர் இக்கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினர். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படும் மகளிருக்கான தேசிய ஆணையம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கு பணியாற்றுகிறது. இந்த அமைச்சகத்தின் மூலம் 2008ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.