ராமாயணம், மகாபாரதம் எனப் பெண்களே இயக்கிய காவியங்களில் எல்லாம், ஹிந்து தர்மம் கொடுத்த பெண் உரிமை பட்டவர்த்தனமாக தெரியும். தமது ராமாயணக் காப்பியமே சீதையின் நற்குணநலன்களை முன் நிறுத்தித்தான், என்பதை வால்மீகி பல இடங்களில் வலியுறுத்துகிறார். சீதா, கைகேயி, காந்தாரி உட்பட பெண்களே அந்தக் காப்பியத்தின் பிற நாயகியர். அவர்களின்றி ராமகாதையே இல்லை. நாயன்மார்கள் 63 பேரில் 3 பேர் பெண்கள். மீதி 60 பேரில் பாதிபேர் வாழ்வில் பெண்களே சரிபாதியாக நாயன்மார்களுக்குத் துணை நின்றிருக்கின்றனர்.
இயற்பகை நாயனார், திருநீலகண்ட நாயனார், சிறுதொண்ட நாயனார், அப்பூதி அடிகள் நாயனார் எனப் பட்டியல் நீள்கின்றது. ஹிந்துக்கள், பெண்கள் ஆண்கள் என பிரித்து பார்த்த சமூகம் அல்ல, அடியார்க்கு இணையாக அடியாளும் கொண்டாப் பட்டிருக்கிறாள். பல அசுர வதங்கள் பெண்கள் கைகளாலே நடந்ததை சொல்லிப் பெண்ணுக்கான மரியாதையினை கொடுத்திருக்கின்றது. தெய்வங்களுமே பெண்கள் இன்றி பலமோடு இருக்காது என்கிறது உமையொருபாகத் தத்துவம். பெண்ணின் துணை கொண்டே ஒரு ஆண் முழுமையடைவான் என்கிறது சனாதன தர்மம். ஆண்டாளும் மீராவும் கொடுத்த இலக்கியங்களுக்கும் பக்திக்கும் நிகராகப் பிற கலாச்சாரத்தில் பெண்ணைக் காட்டுவது அரிது. ஹிந்து தர்மமே பக்தி, ஆட்சி, இலக்கியம் என எல்லாவற்றிலும் பெண்ணுக்கான சம உரிமையினை கொடுத்து காத்து நிற்கின்றது என்றால் அது மிகை அல்ல.
— அகிலன்