தீபாவளி பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை மத்திய அரசு கடந்த நவம்பர் 3ம் தேதி கணிசமாகக் குறைத்தது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 என மத்திய அரசு குறைத்தபோது, மக்களுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநிலங்களும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து புதுச்சேரி, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கணிசமாக குறைத்துள்ளன. ஆனால், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை இன்னமும் குறைக்காமல் உள்ளன. மக்கள் சிரமங்களை புரிந்துகொள்வார்களா?