புரியவில்லை எனக்கு …….

மைக்கேல்பட்டி திருஇருதய மேல்நிலை பள்ளி மாணவி தற்கொலை செய்து இறந்த போது வராத கோபம் புரட்சி, நெல்லை சாப்டர் பள்ளி நிர்வாக கவனக்குறைவால் கழிவறை சுவர் இடிந்து  விழுந்து 4 மாணவர்கள் துடிக்க துடிக்க இறந்த போது வராத கோபம் புரட்சி, கள்ளக்குறிச்சி  ” சக்தி ” பள்ளி மீது மட்டும் எப்படி வந்தது?  அதுவும் சம்பவம் நடந்து 4 நாட்கள் கழித்து? கோபமும் புரட்சியும் கொந்தளிப்பும் கூட மதம் பார்த்து தான் வருமா ?

சக்தி பள்ளி நிர்வாகம் நல்வர்கள் அப்பாவிகள் என்று சான்றிதழ் வழங்க நான் இங்கே எழுதவில்லை. அவர்கள் தவறு செய்தார்களா இல்லையா என்பதை  சட்டமும் நீதிமன்றமும் முடிவு செய்யட்டும். ஆனால் தமிழகத்தில் பொதுமக்களின்  சாதாரணமான மனநிலை என்பது போலீஸ் கோர்ட் பாத்துக்கும் என்பதுதான். அதன் பிரதிபலிப்பு தான் கிறிஸ்தவ மிஷநரி பள்ளிகளில் மரணங்கள் ஏற்பட்டபோது நடந்தது. இதுதான் மக்களின் யதார்த்தமான மனநிலை.

” சக்தி ” பள்ளி என்றவுடன் இந்த யதார்த்த மனநிலை மாற்றப்பட்டதா?  அல்லது மக்கள் என்ற போர்வையில் கலவரக்காரர்கள் வன்முறை செய்தார்களா? என்பது நிச்சயம் புலன்விசாரணை செய்யப்பட வேண்டும். ஒரு மணி நேரத்தில் 500 பேர் வாட்சப் குழுவில் இணைந்து பள்ளிக்கு போராட வருமாறு செய்தி பரப்பியதாக உளவுத்துறை கண்டறிந்ததாக செய்திகள் வருகிறது.

நான் 14வயது முதல் பொதுவாழ்க்கையில் இருப்பவன். 29 வருடங்களாக பல போராட்டங்களை நடத்தி வருகிறவன். சாதாரணமாக ஒரு அமைதி போராட்டத்திற்கே வெகுஜன மக்களை திரட்டுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். மக்கள் தன்னெழுச்சியில் வீதிக்கு வந்து போராடி அதுவும் பேருந்துகளை கொளுத்தி பள்ளியை சூறையாடும் அளவிற்கு வன்முறையாளர்கள் அல்ல தமிழகத்தில் அத்தகைய இயல்பு சாதாரணமாக வருவதில்லை.

ஒருவேளை ஒரு சம்பவம் நடந்து உடனடியாக கூட ஆத்திரம் மேலோங்கும். ஆனால் 4நாள் கழித்து ஆற அமர திட்டமிட்டு ஆத்திரம் சாதாரண மக்களுக்கு வருவதில்லை. இதன் பின்னணியில் தூண்டுதலாக பல மிகப்பெரிய சக்திகள் இருந்திருக்க கூடும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் கூட நக்சலைட்டுகள் ஊடுருவி  கலவரமாக்கி நாசப்படுத்தியதை நாடறியும்.

சாதாரண நிகழ்வுகளையும் சர்வதேச பிண்ணனியோடு ஆராய வேண்டிய காலகட்டம் இது. ஆம், இங்கே பல குற்றங்களின் ரிஷி மூலம் கண்டறிய முற்பட்டால் அது நாட்டின் எல்லைகளையும் கடந்து செல்லும். இந்த கலவரம் நிச்சயம் நடுநிலையோடு அரசியல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் விசாரிக்கப்பட வேண்டும். தேவையெனில் தேசிய அளவிலான புலனாய்வு அமைப்புகளை கூட பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில் இது போன்ற வன்முறைகள் வரும் காலத்தில் காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் சட்டம் ஒழுங்கை காப்பதில் மிகப்பெரிய சவாலாக அமையும்.

மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். மாற்று கருத்தில்லை. ஆனால் புரட்சி கோபம் ஆத்திரம் எல்லாம் நிர்வாகத்தின் மதம் பார்த்து வருகிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது

கா. குற்றாலநாதன்

(சமூக ஊடகத்தில் இருந்து)