மழைகாலம் தவிர மற்ற காலங்களில் வறண்டே காணப்படும் பாலாறு ஆந்திரா தமிழகம் இடையே 348 கி.மீ பயணித்து 2 லட்சம் ஏக்கர் விவசாயத்திற்கு உதவுகிறது. வறண்டே இருப்பதால் இதில் மணல் கொள்ளை அதிகம். இதனால் பொலிவிழந்தது பாலாறு. 1858-ல் வாலாஜாவில் கட்டப்பட்ட தடுப்பணை மட்டுமே பல காலமாக இருந்து வந்தது. தற்போது கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் கட்டப்பட்ட வயலூர் தடுப்பணை, பாலூர் தடுப்பணை, ஈசூர் தடுப்பணைகளால் பலாறு மெல்ல புத்துயிர் பெறுகிறது.
இதைதவிர மேலும் ஆறு தடுப்பணைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயம், குடிநீர் தேவைகளுக்கு என 4.5 டி.எம்.சி நீர் சேமிக்கலாம்.
செய்திகள் சிறப்பு