புதுக்கோட்டை ஜில்லா, அறந்தாங்கி நகராட்சியில் மையப்பகுதியான அருகன்குளம் சுமார் 10 ஏக்கர் நிலம். இது 74 பினாமி நபர்களால் வருவாய் துறையின் மூலம் குளம் புறம்போக்கு என்ற பெயரில் ஆகிரமிக்கப்பட்டு வேலிக்கருவை காடாக மண்டிக்கிடந்தது.
அறந்தாங்கி நகராட்சி மேற்கு பாடசாலைக்காக பள்ளியின் மேற்கு பாடசாலையின் தலைமை ஆசிரியர்கள் பல உள்ளூர் பிரமுகர்களிடம் கூறியும் அவர்களால் இடம் தேர்வு செய்து கொடுக்க முடியவில்லை. பள்ளி வாடகை கட்டிடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு மழை பெய்தால் ஒழுகும். நாளடைவில் பள்ளியின் மாணவ, மாணவிகள் தொடர்ந்து படிக்கமுடியாமலும் மதிய உணவு தானியங்கள் வீனாகியும் வந்தது. நகராட்சியும் இதற்கு மாற்று ஏற்பாடு செய்யமுடியவில்லை.
06.06.1993-ம் அன்று ஆர்.எஸ்.எஸ்ஸிடம் வந்து பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜலெட்சுமி அம்மாள் எல்லாவற்றையும் சொன்னார். உடனே நமது ஸ்வயம்சேவகர்கள், குரு.சோலையப்பன், சுப.காளியப்பன் தலைமையில் குழு களத்தில் இறங்கியது.
அச்சமயம் வருவாய் துறை அலுவலகத்தின் வருவாய் அலுவலராக இருந்த சங்கரலிங்கம் அவர்களை சந்தித்து ஏதாவது புறம்போக்கு நிலம் இருந்தால் கொடுங்கள். நகராட்சி மேற்கு பாடசாலைக்கு இடம் வேண்டும் என்று கேட்டனர். சங்கரலிங்கம் ஆர்.ஐ அவர்களும் மேலே குறிப்பிட்ட அருகன் குளம் புறம்போக்கு வேலிக்கருவை காட்டை காண்பித்து நீங்கள் எவ்வளவு இடம் வேண்டுமானாலூம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்.
உடனே சங்கம் மூலமாக வேலிக்கருவையை வெட்டி சுத்தம் செய்ய ஆட்களை விட்டோம். அச்சமயம் நகராட்சி M.E., நகராட்சி இஞ்சினியர் மனோகர சந்திரன் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் எல்லோரையும் ஒருவாரம் வேலிக்கருவையை வெட்ட ஆட்களையும் அனுப்பி அவரும் பக்கத்தில் எங்களுடன் இருந்து வேலை செய்தார். அச்சமயம் அந்த இடத்தில் அங்கு B.Memo போட்ட நபர்கள் சிலபேர் அடியாட்களுடன் வந்து சண்டையிட்டார்கள். அப்போது பீஸ் கமிட்டியை (R.D.O.) போட்டார். இதற்குப் பிறகும் B.Memo போட்டவர்கள் தினசரி ஆட்களை கூட்டி வந்து தொந்தரவு செய்தார்கள். பெரிய போராட்டத்திற்கிடையே ஆர்.எஸ்.எஸ்ஸும், சமூக சேவகர்களும், எல்லா கட்சியையும் இணைத்து அந்த இடத்தில் 29 நாட்கள் இரவு பகலாக காவல் காத்து வந்தோம்.
பீஸ் கமிட்டியின் முடிவின்படி பள்ளிக்கு இடம் கொடுக்கத்தான் வேண்டும் என்று ஆர்.டி.ஓ கூறிவிட்டார்.
பிறகு நாங்கள் கலெக்டரைச் சந்தித்து இந்த இடம் அறந்தாங்கி நகரத்திற்கு மையமாக இருப்பதால் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், நல்ல காரியங்கள் நடைபெறவும் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினோம்.
அப்பொழுது இருந்த கலெக்டர் ஸ்வரன்சிங் 10 ஏக்கர் அருகன்குளம் புறம் போக்கு நிலம் பொதுமக்களுக்கே உரியது இதில் வேறு யாரும் பி.மெமோ போடக்கூடாது என்று கூறி அந்த இடத்தில் போர்டு வைத்து விட்டார்.
பிறகு அந்த இடத்தில் நகராட்சி மேற்கு பாடசாலை அமைக்கப்பட்டது. பிறகு கலெக்டர் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து அந்த இடத்தை அறந்தாங்கி நகராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்பொழுது அந்த இடத்தில் மேற்கு பாடசாலை பள்ளி, பள்ளிகல்வித்துறை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசினர் ஆதி திராவிடர் மாணவிகள் தங்கும் விடுதி, மீன் மார்க்கெட், உழவர் சந்தை, பொதுகூட்டம் கலைநிகழ்ச்சிகள் நடத்தும்மேடை, மேலும் பூங்கா அமைந்து நகர மக்களுக்கு நல்ல பொழுது போக்காகவும், உபயோகமாகவும் உள்ளது.
இந்த விஷயம் ஆர்.எஸ்.எஸ் செய்த சாதனை என்றால் மிகையில்லை.
திருப்புனவாசலில் ஹிந்து பள்ளிக்கூடம் அமைந்த கதை
புதுக்கோட்டை மாவட்டம், திருப்புன வாசலிலிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் ஓரியூர் என்ற ஊரில் 19-ம் நூற்றாண்டில் இருந்து ஒரு கிருஸ்தவப்பள்ளி நடந்து வருகிறது. அந்தப்பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது முதலில் கிறிஸ்தவப் மாணவர்களை சேர்ப்பார்கள். 2 வதாக முஸ்லிம் மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள். 3-வதாக இடம் இருந்தால் மட்டும் ஹிந்து மாணவர்களை சேர்த்துக் கொள்வார்கள்.
அப்படி இருக்கும்பொழுது நமது ஆர்.எஸ்.எஸ்ஸில் ஷாகா 1980-ல் திருப்புன வாசல் கோயில் வாசலில் ஆரம்பிக்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஹிந்து பொது மக்கள் பழமையான ஹிந்து கோயில் அமைந்துள்ள இந்த திருப்புனவாசலில் ஒரு ஹிந்து பள்ளி அமைய உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கினங்க அச்சமயம் ஆர்.எஸ்.எஸ்ஸின் திருச்சி “விபாக் தலைவராக இருந்த மானனீய ஸ்ரீ எம்.எஸ்.வெங்கட்ரெங்கன்ஜியைப் பார்த்து ஊர் கிராம முக்கிய பிரமுகர்களை கூட்டிக்கொண்டு திருப்பராய்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் பூஜனீய சுவாமி சித்பவானந்த மஹராஜைப் பார்த்து பேசினோம். பிறகு பூஜனீய சுவாமி நித்யானந்த மஹாராஜைப் பார்த்துப் பேசியதன் மூலம் தபோவனம் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு எந்த உதவியும் எங்களால் இயலாது என்று கூறிவிட்டார்கள்.
பிறகு திருப்புனவாசலில் பங்களா, விடுதி இடங்கள் என்று கோயில் அருகாமையில் உள்ள கட்டிடம் பெரிய இடங்களுக்கு சொந்தமான தேவகோட்டை, நாட்டுக்கோட்டை திருநாவுக்கரசு செட்டியாரைப் பார்த்து பேசி இரண்டு கட்டிடங்கள், இடங்களையும் பெற்று ஸ்ரீ ராமகிருஷ்ணா விவேகானந்த மேல்நிலைப் பள்ளியை மானனீய ஸ்ரீ எம்.எஸ்.வெங்கட்ரெங்கன்ஜியின் தலைமையில் பள்ளி ஆரம்பித்து நல்ல ஹிந்துப்பள்ளியாக கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது.
இந்த செயல்கள் முழுவதும் நமது
ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களின் இடை
விடாத முயற்சியின் பயனாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. F