திருப்பாவை பாடல்களின் சாரம் என்ன?
– சகுந்தலா ராஜன், அரியலூர்
உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்ற நம் காமங்கள் மாற்று” – இறைவனிடம் உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர எனது மற்ற விருப்பங்களை எல்லாம் நீயே அழித்து விடு” என்கிறாள் ஆண்டாள்.
* ஹிந்து – கிறிஸ்தவம் – இஸ்லாம் இவற்றில் எந்த மதம் உயர்ந்தது?
– வ. நமசிவாய முதலியார், ஆரணி
அவரவர் மதம் அவரவர்களுக்கு உயர்ந்தது. இருந்தாலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் என்று வாதிடுகிறது. ஆனால் எந்த பெயரில் அழைத்தாலும் இறைவன் ஒருவனே என்கிறது ஹிந்துத்துவம். கிறிஸ்தவமும் இஸ்லாமும் வெளிநாட்டில் தோன்றியது. ஹிந்துத்துவம் மட்டுமே பாரதத்தில் தோன்றியது.
குழந்தைகளுக்குக் கூட பாரதியைப் பிடிப்பது ஏன்?
– எம். ராகேஷ், தர்மபுரி
மற்றவர்கள் எல்லாம் படி, படி என்று சொன்னபோது அவன் ஒருவன் மட்டுமே ஓடி விளையாடு பாப்பா” என்று விளையாடச் சொன்னவன்.
வெள்ள நிவாரணப் பணிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்களிப்பு பற்றி?
– மாலா கோபாலன், கோட்டூர்புரம்
இதுவரை நிவாரணப் பணிகளில் எதுவும் விசேஷமாக அவர்கள் செய்ததாகத் தெரியவில்லை. இப்போது சென்னையைக் காப்பாற்றிய தேவனுக்காகப் பிரார்த்தனை என்றெல்லாம் கப்ஸா விட்டு தங்களது மத வியாபாரத்தைத் தொடங்கி விட்டார்கள். ஏழைகளின் கண்ணீரை சாதகமாக்கி மதம் மாற்றுவது என்பது விபச்சாரமே என்கிறார் ஒரு பெரியவர்.
சிம்பு, அனிருத் பாடிய
– விமலாதித்தன், கோவில்பட்டி
ஆபாசத்தை எவர் சொன்னாலும் கண்டிக்க வேண்டியதுதான். அதே சமயம் எதிர்ப்பு தெரிவிக்கிற அனைவருமே இடதுசாரி அமைப்பினரே. இவர்கள் ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்தி பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் புத்தகத்திற்கு எதிர்ப்பு வந்தபோது கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கிடையாதா என்று முழங்கினார்களே!
* கருணாநிதி மந்திரிக்கப்பட்ட சிவப்புக் கயிறை கைகளில் கட்டியிருக்கிறாராமே…?
– வெ. தமிழ்மாறன், விருத்தாச்சலம்
கருப்பு துண்டு போச்சு; மஞ்சள் துண்டு வந்தது டும்… டும்… டும்…! இப்போ நாத்திகம் போச்சு; மாந்திரீக சிவப்பு கயிறு வந்தது டும்… டும்… டும்… வாழ்க கலைஞரின் பகுத்தறிவு டும்… டும்… டும்…!
நேஷனல் ஹெரால்டு வழக்கிற்காக காங்கிரஸ் நாடாளுமன்றத்தை முடக்கியது சரியா?
– சம்பத் சேதுராமன், உடையார்கோவில்
சோனியா, ராகுல் மீது ஊழல் புகார் தெரிவித்தது சுப்பிரமணிய சுவாமி. தைரியம் இருந்தால் வழக்கு தொடருங்கள் என்று சவால் விட்டது காங்கிரஸ். சரி என்று சொல்லி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது நடந்தது 2012ல். அப்போது மோடி அரசும் இல்லை. அந்த வழக்கு இப்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதற்கு மோடி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கு பதில் நாடாளுமன்றத்தை முடக்குவது கண்டனத்துக்குரியது.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.