பீதியில் ஊழல், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள் சாம்பலானது சதிகார நிதி!

மோடி அறிவித்தப்படி ரூ.500,  ரூ,1,000 நோட்டுகள் செல்லாது என்றவுடன் மிகப் பெரிய அடி மாவோயிஸ்ட்களுக்கு என்றால் மிகையாகாது.  மாவோயிஸ்ட்களின் பாசப்பிணைப்பில் உள்ள இடதுசாரிகள், திட்டத்தை நேரடியாக எதிர்க்காமல், செயலாக்கத்தை விமர்சிக்கிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம். உளவு துறை, அங்கே ரூ. 500, ரூ.1,000 நோட்டுகள் சுமார் 7,000 கோடி அளவில் புழங்கக்கூடும் என்று கூறியுள்ளது.  இவர்களுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு கிடைத்து? மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தவர்களின் கருத்துப்படி மாவோயிஸ்ட்கள் பதுக்கியுள்ள பணத்தின் அளவு ரூ.7,000 கோடிக்கு மேல் இருக்கும். இந்த பதுக்கல் என்பது பஸ்தர் பகுதியில் மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார்கள்.  மோடியின் அறிவிப்பால், தற்போது இந்த நோட்டுகள் வெறும் விட்டன. எந்த மதிப்பும் இதற்கு கிடையாது.  இதன் காரணமாக மாவோயிஸ்ட்கள் தங்களின் தொண்டர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலாமல், ஆயுதங்கள் வாங்க முடியாமல் திணறும் சூழ்நிலை

ஏற்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட்களின் ஆண்டு வருமானம் ரூ. 1,000 கோடிக்கு மேல்!   2009ல் மன்மோகன் சிங் கூட்டிய உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மாவோயிஸ்ட்களின் ஆண்டு வருமானம் ரூ. 2,000 கோடிக்கு மேல் என்று கூறினார்கள்.  குறிப்பாக உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, 2009ல் மாவோயிஸ்ட்களின் வருமானம் 1,400 கோடி ரூபாய் என தெரிவித்தார்.  சத்தீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஷ்வரஞ்சன், குறைந்த பட்சம் 2,000 கோடி என தெரிவித்தார்.  2007ல் மாவோயிஸ்ட் பொலிட்பிரோ உறுப்பினர் –Misir Besra என்பவர் தானாகவே  சரணடைந்தபோது,  2007ல் 1,000 கோடி ஆண்டு வருமானம் என்றும், 2008ல் 1,125 கோடி அதிகமாக வசூலித்ததாகவும் தெரிவித்தார்.  வங்கிகளில் கொள்ளையடிப்பதும் மாவோயிஸ்ட்களின் வாடிக்கை. 2007 மே மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ.  வங்கியில் ஐந்து கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.

இவர்கள் வசூலிக்கும் நிதி அனைத்தும் சட்ட விரோதமாகவே வருகிறது.  மாவோயிஸ்ட் தடுப்பு டிஜிபி டி.எம்.அவஸ்தி, மிரட்டி பணம் பறித்தல், வலுக்கட்டாய வசூல்,  அரசு விடும் டென்டர் எடுப்பவர்களிடம் டென்டர் தொகைக்கு ஏற்ப பணம், ஆட்களை கடத்தி வசூல் என்று பலவிதமாக மாவோயிஸ்ட்கள் திரட்டுகிறார்கள்.  இந்த பணம் ரூ. 500, ரூ. 1,000 நோட்டாகவே வசூலிக்கப்படுகிறது.  இம்மாதம் 10ம் தேதி கொண்டாகாம் மாவட்டத்தில் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ44.25 லட்சம்

(மேற்படி நோட்டுகள் அனைத்தும் ரூ. 500,

ரூ. 1,000 கட்டுகள்) மாவோயிஸ்ட்களின் பணம் என்றும் மேற்படி பணத்தை மாற்றுவதற்கு வழி தேடி அந்த நபர்  கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அரசியல் கட்சிகளின் ஆதங்கம்

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாகி விட்டது அரசியல்வாதிகளின் கதி.  குறிப்பாக திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மமதா பானர்ஜி நேரடியாக மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில்  அமளி தொடரும் என எச்சரித்தார். மற்ற கட்சிகளை விட மமதா துள்ளிக் குதிக்க வேண்டிய அவசியம் என்ன?

முஸ்லிம் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வந்தவர் இவர்.  மோடி அறிவித்த செயல் திட்டம், பாகிஸ்தானிலிருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் இந்தியாவிற்குள் ஊடுருவும் இடம் இவர் ஆளும் மேற்கு வங்க மாநிலம்.  பங்களா தேஷ் – மேற்கு வங்க மாநில எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் பாகிஸ்தான் கள்ள நோட்டுப்  பரிமாற்றம் அன்றாட தொழிலாகவே நடக்கிறது.  மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள  Kaliachawk   என்ற பகுதியில் வாழும் மக்களின் தொழில் கள்ள நோட்டுப் பரிமாற்றம்.

மால்டா மாவட்டம் கள்ள நோட்டின் தலைநகரம்.  மகாராஷ்ட்ரா, உத்தரப் பிரதேசத்தில் கள்ள நோட்டு விநியோகம் செய்தவர்கள் மால்டா மாவட்டத்தை சார்ந்தவர்கள்.  இப்படி 2014 ஏப்ரல் மாதம் பூனாவில் கைது செய்யப்பட்டவர் மால்டா மாவட்டம்  Kaliachawk  பகுதியை சார்ந்தவர். அவரிடம் ரூ 1,96,000 மதிப்புள்ள கள்ள நோட்டு கைப்பற்றப்பட்டது.  இதே மாதத்தில்  மேற்கு வங்கத்தின் மூர்ஷிதாபாத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் மால்டா மாவட்டத்தை சார்ந்தவர்கள். கைதின் போது கையில் வைத்திருந்த கள்ள நோட்டின் மதிப்பு ரூ. 1.5 கோடி.   எல்லைப் பாதுகாப்பு படையினர் 2016 ஜனவரி மாதம் 18 பேரை கைது செய்தார்கள். அவர்களிடம் கைப்பற்றிய கள்ள நோட்டு ரூ 1,35,90,000 என்றும் 2015ல் அதே பகுதியில் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டின் மதிப்பு ரூ. 2,60,82,000 என தெரிவித்தனர்.  மோடியின் அறிவிப்பால் பாதிக்கப்படும்  மால்டா மாவட்ட முஸ்லிம்களை திருப்திப்படுத்தவே மமதாவின் இந்த பாய்ச்சல். 

மமதா சீற்றத்திற்கான இரண்டாவது  காரணம் சுமார் ரூ. 4,000 கோடி  சாரதா சிட் பண்ட்ஸ் ஊழல்.  இந்த ஊழல் பணத்தில் மமதாவிற்கும் பங்கு உண்டு என்று காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் குற்றம் சாட்டுகிறார்கள்.  மமதாவின் திருணமூல் காங்கிரஸ் கட்சி மோசடி நிறுவனமான  சாரதா  சிட்பண்ட்ஸ்  சி.இ.ஓவான  Kalyan Gupta   என்பவரை தனது கட்சியின் சார்பாக  ராஜ்ய சபைக்கு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.   போக்குவரத்து மந்திரி சாரதா சிட்பண்ட் தொழிலாளர் யூனியனின் தலைவர்.  நடிகையாக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரான Sataudi Roy சாரதா சிட்பண்ட்ஸ்  தூதர்!  ஆகவே மமதா  சாரதா சிட்பண்ட்லிருந்து பெற்ற பணத்திற்கு வஞ்சகம் இல்லாமல் பதவி கொடுத்துள்ளார்.  வாங்கிய  பணம் முழுவதும் 1,000 ரூபாய் நோட்டாக இருப்பதால், தற்போது அறிவித்த திட்டம்  மொத்த பணத்தையும் செல்லாக் காசாக்கி விட்டதே என்பதே இவர் கோபத்தின் சூட்சுமம்.

இடதுசாரி கம்யூனிஸ்ட்

நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  மோடி கொண்டு வந்த திட்டத்தைப் பற்றிப் பேசாமல், பாரதிய ஜனதா கட்சியின் மீது குற்றம் சுமத்த மட்டுமே விவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.   ஊழல்வாதிகளையும்  பணம் கொள்யைடித்த அரசியல்வாதிகளையும் ஒடுக்க வேண்டும் என குரல் கொடுக்கும் இடதுசாரி கம்யூனிஸ்டகள்,  தமிழகத்தில்  ஆர்பாட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? இவர்களும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் வக்காலத்து வாங்கும் விதமாகவே தங்களது கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.  சுமார்

ரூ. 7,000 கோடி பதுக்கல் வைத்திருக்கும் மாவோயிஸ்ட்கள் பற்றிய விசாரணை இவர்களிடம் கிடையாது.   கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஒரு கட்டுரையில் பிரதமரின் இந்த நடவடிக்கை நாட்டின் நலனுக்கு அவசியம் என்பதால், இடைக்கால சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு வெற்றிபெற விழைவது நல்லது என கூறியதை இடதுசாரிகள் நினைவு படுத்திப் பார்க்கட்டும்.

மோடியின் அதிரடி அறிவிப்பால், ஆடிப்போன பயங்கரவாத இயக்கங்கள், தங்களுக்கு தேவையான நிதியை பெற சிரமப்படுவதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.   இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி ஹவாலா மூலமே கிடைக்கிறது.  இந்தியாவில் உள்ள இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு  மும்பையில் உள்ள ஹவாலா  மூலம் பணம் கிடைத்து வந்தது.  இந்த ஹவாலா மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்  கஞ்சா, அபின் போன்ற போதை பொருள்கள் கள்ளத் தனமாக அயல்நாடுகளுக்கு ஏற்மதி செய்து ஹவாலா மூலம் பணமாக இந்திய வருகிறது.  இந்த வியாபாரத்தில் இப்போது மண்.

ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை ஹவாலா மூலமாகவே வெளிநாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் திரும்ப பெறுவதும் வாடிக்கை.  இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் தினசரி ரூ. 1,000 கோடிக்கு மேல் ஹவாலா மூலம் பணம் கை மாறுகிறது.  இந்த அறிவிப்பால் 80 சதவீதம் பணமும் ஒரே நொடியில் பேப்பர் ஆகிவிட்டதால், ஹவாலா தொழிலே முடக்கப்பட்டது.

மும்பையில் கடந்த புதன் கிழமை ஹவாலா ஆசாமி ஒருவர் தன்னிடமிருந்த 500 கோடி ரூபாயை தீயிட்டு கொளுத்தி விட்டார்.  சென்னையில் உள்ள ஹவாலா ஆள்  தன்னிடமிருந்த 450 கோடி ரூபாயை  கொளுத்தினார்.  ஏன் என்றால் இதற்குரியவர்களிடம் சேர்ப்பிக்க இயலாது, பழைய நோட்டுகளை வாங்க மறுத்து விட்டதால் தீயிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டோம் என்றார் (ஆதாரம் இந்தியா டுடே 10.11.2016).