தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ சில ஊடகவியலாளர்களை விசாரித்ததில்சில திடுக்கிடும் விவரங்கள் வெளியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, பயங்கரவாத சித்தாந்தங்களுக்கு விசுவாசமான ஊடகவியலாளர்களின் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப் ஹர்த்தால்’ (முஸ்லிம் பயங்கரவாதிகளால் அழைக்கப்படும் வார்த்தை), அதில், சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம், லட்சத்தீவு பிரச்சனைகள் மற்றும் பலவற்றை இந்த குழு விவாதிக்கப்பட்டுள்ளது. குழு விவாதங்களின் அடிப்படையில் இந்த ஊடகவியலாளர்கள் புனையப்பட்ட செய்திகளை பதிப்பித்ததாக என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. லட்சத்தீவு விவகாரங்கள் தொடர்பாக உரத்த குரலில் பதிலளித்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் இந்த குழுவினரில் ஒருவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலேயே பயங்கரவாதிகள் அதிகம் ஆட்சேர்ப்பு செய்யப்படும் மாநிலம் கேரளா என்பது அனைவரும் அறிந்த உண்மை. மேலும், மாநிலத்தில் பல ஸ்லீப்பர் செல்கள் வேலை செய்கின்றன. கேரளாவில் ஒரு காட்சி ஊடகவியலாளர் உட்பட 6 ஊடகவியலாளர்களை என்.ஐ.ஏ இதற்காக விசாரணை செய்துள்ளது. அவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியை கேரளாவிற்கு வெளியே கழித்தார். தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்ட சித்திக் கப்பனுடன் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஏற்கனவே அவர் என்.ஐ.ஏ மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்தார். மத்திய அரசு சமீபத்தில் பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ததில் இருந்து என்.ஐ.ஏ ஊடகங்களை கடுமையாக கண்காணிக்க தொடங்கியது. வரும் நாட்களில் மேலும் பல ஊடகவியலாளர்களை என்.ஐ.ஏ விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (செய்தி ஆதாரம்: https://vskbharat.com/pfi-whatsapp-group-for-media-men/?lang=en)