பி.எப்.ஐ ஆயுதப்பயிற்சி வழக்கு

பீகார் மாநிலம் பாட்னாவில் பி.எப்.ஐ அடிப்படைவாத அமைப்பை சேர்ந்தவர்கள், பல்வேறு பகுதியில் உள்ள முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்த வழக்கில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி எம்.டி ஜலாவுதீன், மற்றவர் அதர் பர்வேஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2047ல் பாரதத்தில் முஸ்லிம் ராஜ்ஜியம் அமைத்து இங்குள்ள ஹிந்துக்களை அடிபணிய வைக்கும் பி.எப்.ஐ அமைப்பின் பயங்கர சதித்திட்டம் அடங்கிய ‘இந்தியா விஷன் 2047’ என்ற ஆவணம் கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களின் இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து நேற்று பேசிய எஸ்.எஸ்.பி அவகாஷ் குமார், பி.எப்.ஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் தர்பங்காவில் வசிப்பவர்கள். அவர்களை கண்டுபிடிக்க சோதனை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக பாட்னா காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பழைய வரலாறு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.