சென்றமாதகடைசியில், ஜம்முகாஷ்மீரின் ஆளுநர் சத்யா பால்மாலிக், காஷ்மீரில் மெல்ல மெல்ல சூழ்நிலை நன்னிலைக்கு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்றும் அதன் ஒருகுறியீடாக ‘ ஹுரியத்தலைவர்கள்கூட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள்’ என்றும் குறிப்பிட்டார். உடனே பிடித்துக் கொண்டார்கள்ஊடகக்காரர்கள்.
ஆளுநர் சொன்ன மற்றவற்றை விட்டுவிட்டு இந்த ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு ஓரிரு நாள் பிழைப்பு நடத்தலாமே என்று கணக்கிட்டார்கள் வெறும் வாயை மெல்லும் இவர்கள்.
இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ஹுரியத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமாம். பதவியை இழந்த மெஹபூபாவும் கோஷ்டி கானத்தில் சேர்ந்து கொண்டார்.
நம்மைப் பொறுத்தவரை இந்த கருத்தில் உடன்பாடில்லை. ஆளுநர் தன் கருத்தை வெளிப்படுத்துகையில் இன்னும் சிறிது கவனமாக கருதுகிறோம்.
பாருங்கள், இப்பொழுது குடியரசுத்தலைவர் ஆட்சியில், காஷ்மீரில் அமைதி கொஞ்சம் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தலும் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு நிர்வாகம் இனிமேல்தான் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும்.
ராணுவமும் ஜகா காவல்துறையும் தீவிரவாதிகளுக்கு சரியான ‘ பாடம் ‘ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இப்பொழுது போய் இவர்களை பேச அழைத்து, ப்ரிவினைவாதிகளுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்ளவும் புதிய உத்திகளை வகுக்கவும் அவகாசம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமா என்ன?
மேலும் இந்த ஹுரியத்தலைவர்கள்- (பாக்- சவுதி பணத்தில் வசதியாக வாழ்பவர்கள்) எல்லாம் முதலில் நம் நாட்டு அரசியல் அமைப்பின் மீது- சட்டத்தின் மீது தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தட்டும்.
இந்த ஹுரியத்தலைவர்களுக்கு உள்துறை பொறுப்பு ஏற்றவுடன், அமீத்ஷா பாதுகாப்பை நீக்கிவிட்டார். இவர்கள் எல்லாம் செல்லாக்காசுகள்; இவர்களுடன் பேச என்ன இருக்கிறது?