ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இத்தாலி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு 11 நாள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். ஐரோப்பாவின் 12 நாடுகளில் வசிக்கும் ஒடிசா மாநில மக்களிடையே இத்தாலியின் ரோம் நகரில் உரையாற்றிய அவர், வெளிநாடு வாழ் ஒடிசா மக்கள், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவிட கோரிக்கை விடுத்தார். மேலும், பிரிட்டனில் ஜெகன்நாதர் கோவில் கட்ட தேவையான அனைத்து உதவிகளையும் ஒடிசா அரசு செய்யும்’ என அவர் உறுதியளித்தார். ஒடிசாவில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் அம்மாநில அரசு சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தி வருவதற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.