பிரதமர் மோடி அஞ்சலி

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நினைவு தினமான நேற்று, அதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், ‘1919ம் ஆம் ஆண்டு இந்நாளில் ஜாலியன் வாலாபாக்கில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் ஈடு இணையற்ற துணிவும் தியாகவும் வரும் தலைமுறையினரை ஊக்குவிக்கும். கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் ஸ்மாரக் வளாகத்தின் திறப்பு விழாவில் எனது உரையைப் பகிர்ந்துக் கொள்கிறேன்” என கூறி திறப்பு விழா உரையின் வீடியோவை பகிர்ந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிரிழந்த இறவாப்புகழ் பெற்ற தியாகிகளின் தைரியத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன், இது அந்நிய ஆட்சியின் இரக்கமற்ற கொடூரமான அட்டூழியங்களின் அடையாளமாகும். பாரத அன்னையின் சுதந்திரத்திற்கான உங்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தியாகம் செய்ய வரவிருக்கும் தலைமுறையினரை தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.