பெரம்பலூர் மாவட்டம், லப்பைக் குடிகாட்டில் அண்மையில் நடை பெற்ற தமுமுக தெருமுனை விளக்கக் கூட்டத்தில் பேசும்போது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த இயக்கத்தின் தலைமைக் கழக பேச்சாளர் மீது குற்ற வழக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த ஆக.23-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அவ்வமைப் பின் தலைமைக் கழக பேச்சாளர் எம்.முகமது ஷரீப் பேசியதாக, ஒரு விடியோ பதிவு சமூக வலைதளங் களில் பரவி இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அந்த விடியோ பதிவில், ‘எங்கள் கொள்கை எதிரி பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான். இவர்களால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டும் அல்லாமல் நாட்டின் பிற சமூகத்தவர்களும் என்பதால் அவர்களுக்காகவும் பேசுகிறோம். நாங்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக நினைத்திருந்தால் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்த உடனே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை அமைச்சர் அமித் ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார். இந்நேரம் நாடாளுமன்றம் நாடாளுமன்றமாக இருந்திருக்காது. உளவுத்துறையினர் குறித்துக் கொள்ளுங்கள்…’ என்று முக மது ஷரீப் பேசுவதாக அமைந்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் பரவிய இந்த சர்ச்சைப் பதிவு குறித்து போலீஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்றனர்.