பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு, உள் நாட்டு வெளிநாட்டு பண மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நாட்டின் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையினர் காவல்துறையினருடன் நாடு தழுவிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும்அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியினரின் அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து 109 தலைவர்கள் மற்றும் 45 செயல்பாட்டாளர்களை கைது செய்தனர். இந்த சோதனையின்போது பயங்கர ஆயுதங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில், பிரதமர் மோடியின் பாட்னா விஜயத்தின் போது அவரைத் கொல்வதற்கு பி.எப்.ஐ ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. பல ஆண்டுகளாக பி.எப்.ஐயால் சேகரிக்கப்பட்ட ரூ.120 கோடி பணம், நாடு முழுவதும் கலவரங்கள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நிதியின் கணிசமான பகுதியானது நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டது. டெல்லி கலவரத்தைத் தூண்டுதல், வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டும் நோக்கத்துடன் பி.எப்.ஐ ஆட்களை உ.பி மாநிலம் ஹத்ராசுக்கு அனுப்புதல், கலவரம் மற்றும் பயங்கரவாதத்தைத் தூண்டுதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைச் சேகரித்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை குலைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. பல ஹிந்து தலைவர்கள் பி.எப்.ஐ அமைப்பின் ‘ஹிட் லிஸ்ட்டில்’ குறி வைக்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/09/pfi-target-pm-modi-bihar-hindu-leaders-hit-list-ed-nia-said-after-arrests/)