நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி, ‘விளிம்பு நிலையில் உள்ள நபர்களின் வாழ்வாதாரத்திற்காக ‘ஸ்மைல்’ எனும் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் துணை திட்டமாக பிச்சையில் ஈடுபடுவோரின் மறுவாழ்வுக்கான திட்டமும், பிச்சையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் கல்வி, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த திட்டம் அளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது’ என தெரிவித்தார்.