பெங்களூரு, பெலத்தூரில் ஓல்டு மெட்ராஸ் சாலையில் உள்ள ஒரு நிலத்தில் மக்கள் அனுமன் கோயிலை கட்டி பல ஆண்டுகளாக வழிபட்டு வந்துள்ளனர். கோயிலை புதுப்பிக்க முயற்சிக்கையில், அந்த நிலம் எச்.எம்.ஜி பாஷா என்ற ஒரு இஸ்லாமியருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனால் புதுப்பிக்காமல் விட்டனர். இதை அறிந்த பாஷா ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள தன் 2,000 சதுரஅடி நிலத்தை கோயிலுக்கே தானமாக கொடுத்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில் ‘கடவுளுக்கு ஜாதி, மதம் மொழி என எதுவும் கிடையாது. எனக்கு அல்லாவும் அனுமனும் ஒன்றுதான். நாம் அனைவரும் சகோதரர்கள். ஒரு சிலர் தங்கள் சுயநலத்துக்காக கடவுளை வைத்து மக்களை பிரிக்கின்றனர் என்றார்.