டெல்லியை தலைமையிடமாக கொண்ட CSIR – IGIB அமைப்பின் இளம் உயிரியல் விஞ்ஞானியான திபோஜோதி சக்கரவர்த்தியை இளம் கண்டுபிடிப்பாளராக ஐரோப்பாவை சேர்ந்த ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகமான EMBO தேர்ந்தெடுத்துள்ளது. 1800 விஞ்ஞானிகளை கொண்ட இந்த அமைப்பு எல்லை கடந்த விஞ்ஞான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் பொருட்டு இதை நடத்துகிறது. அவருக்கு விருதுடன் 15,000 யூரோ பணமும் 10,000 யூரோ அளவுக்கான மானியங்களும் கிடைக்கும். மேலும் அவருடைய ஆராய்ச்சிக்கான வழிகாட்டுதல்கள், நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், நிர்வாகப் பயிற்சிகளும் எம்போவில் ஆய்வுக்கான ஒத்துழைப்பும் கிடைக்கும்.