ஜ.நா’வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் (ECOSOC) அமைப்பான பெண்கள் நிலை ஆணையத்தின் (UNCSW) உறுப்பினராக பாரதம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் நம்முடன் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போட்டியிட்டன. இதில் பாரதம் அபார வெற்றி பெற்றது. சீனா மோசமான தோல்வியை தழுவியது. இது நம் பாரத பெண்களுக்கும், அவர்களை தாயாக கொண்டாடும் நம் பாரத கலாசாரத்திற்கும் கிடைத்த வெற்றி.
முன்னதாக ஐ.நா பாதுகாப்பு சபை நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒருவராக பாரதம் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.