பாரத பங்களிப்பை நாடும் செனகல்

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு காபோன், செனகல் மற்றும் கத்தார் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பல்வேறு துறைகளில் இருதரப்பு கூட்டுறவை மேலும் ஆழப்படுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலுடன், இளைஞர் விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றத் திட்டம், தூதரக அதிகாரிகளுக்கு விசா இல்லாத தடையற்ற பயண ஒப்பந்தம் ஆகிய மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  செனகல் குடியரசுத் தலைவர் மேக்கி சால், செனகலின் ரயில்வே மற்றும் சுகாதாரத்துறையில் பாரதத்தின் ஆதரவைக் கோரியதோடு, ‘எமர்ஜிங் செனகல் 2035’ என்ற தனது பார்வையில் பாரதம் நம்பகமான சிறந்த பங்காளியாக இருக்க வேண்டும் என அழைப்பை விடுத்தார். ஆப்பிரிக்காவின் மாதிரி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக செனகலைப் பாராட்டிய வெங்கையா நாயுடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதம், இந்த விஷயத்தில் செனகலின் வெற்றியைப் பாராட்டுகிறது என்றார். பாரதம் ஐ.நா நிரந்தர உறுப்பு நாடாக நிரந்தர உறுப்பு நாடாக ஆதரவு தெரிவித்த செனகலுக்கு நன்றி தெரிவித்தார்.