அமெரிக்க வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் ஆசிய ஒருங்கிணைப்பாளர் கர்ட் கேம்ப்பெல், பாரதம் ஒரு தனித்துவமான நாடு.அது அமெரிக்காவின் அணியில் இருக்கும் நாடாக இருக்காது.சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் அதற்கு இருக்கிறது.அது மற்றொரு உலக சக்தியாக திகழும்.ஒவ்வொரு துறையிலும் பாரத அமெரிக்க இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது.பாரத அமெரிக்க உறவுக்கு லட்சியம் இருப்பதாக நான் நம்புகிறேன்.விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என பல துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.ஒரே குறிக்கோளுடன் தான் இந்த இரு நாடுகளின் பயணமும் உள்ளது.கடந்த 20 ஆண்டுகளில் பாரதம் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுக்கு இணையாக வேறு எந்த ஒரு இருதரப்பு உறவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.பாரத அமெரிக்க உறவு, சீனாவை மையமாகக்கொண்டு, பதற்றத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்படவில்லை.இது இரு சமூகங்களுக்கிடையே உள்ள ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பதன் ஆழமான புரிலின் அடிப்படையில் கடமைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள பாரத வம்சாவளியினரும் இந்தப் பிணைப்புக்கு ஒரு முக்கிய காரணம்.அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு பாரதத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதையும் மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம்” என்றுதெரிவித்தார்.