பாரதத்துக்கு எதிராக பந்தயம் கட்ட வேண்டாம்

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க்கின் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அதனை பயன்படுத்தி பாரதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் மும்முரமாக இருக்கும் உலகளாவிய ஊடகங்களால் பல ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகப் பொருளாதார சக்திகளில் ஒன்றாக மாறுவதற்கு இந்த ஒற்றை நிகழ்வு தடையாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இது ஒருபோதும் நடைபெற போவதில்லை. இந்த சூழலில், இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள பாரதத்தின் கவனிக்கத்தக்க முக்கிய தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, தனது டுவிட்டர் பதிவில், “வணிகத் துறையில் தற்போதைய சவால்கள் உலகளாவிய பொருளாதார சக்தியாக இருக்க வேண்டும் என்ற பாரதத்தின் அபிலாஷைகளை முறியடிக்குமா என்று உலகளாவிய ஊடகங்கள் ஊகித்து வருகின்றன. பூகம்பங்கள், வறட்சிகள், மந்தநிலைகள், போர்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு நான் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறேன். நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான்: பாரதத்துக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம்” என கூறியுள்ளார்.