பாரதத்தின் புதிய இயங்குதளம்

ஆப்பிள், லாவா, ஃபாக்ஸ்கான், டிக்சன் போன்றவற்றை உள்ளடக்கிய தொழில்துறை அமைப்பான ஐ.சி.இ.ஏ’வால் தயாரிக்கப்பட்ட மின்னணுவியல் உற்பத்தி குறித்த பார்வை ஆவணத்தின் இரண்டாவது தொகுதியை தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுடன் இணைந்து வெளியிட்டார். அப்போது பேசிய ராஜீவ் சந்திரசேகர், ‘உலகில் உள்ள அலைபேசிகளில் கூகிளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் ஆகிய இரண்டு இயங்கு தளங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. மூன்றாவது என்பது பெரிதாக இல்லை. எனவே, புதிய அலைபேசி இயங்கு தளத்தை உருவாக்குவதற்கு தொலைத்தொடர்புத்துறை ஆர்வம் கொண்டுள்ளது. இதுகுறித்து மக்களிடம் பேசி வருகிறோம். அதற்கான கொள்கை வகுப்பதையும் நாங்கள் சிந்தித்து வருகிறோம். உள்நாட்டு இயங்குதளங்கள் உருவாக்குவதற்கு ஸ்டார்ட்அப் மற்றும் கல்விச் சூழல் அமைப்புகளுக்கு உள்ள திறன்கள் முயற்சிக்க வேண்டும். உண்மையான திறன்கள் இருந்தால், அதனை மேம்படுத்துவதில் நாங்கள் உதவுவோம். அது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்டிராய்டுக்கு மாற்றாக ஒரு பாரத பிராண்டாக உருவாக்கப்பட வேண்டும்’ என்றார்.