மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மதம் மாறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜாபுவா மாவட்டத்தில் உள்ள ஹதுனியா கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ பாதிரி ரெசிங் என்பவர், மான் சிங் என்பவரின் பழங்குடி ஹிந்துக் குடும்பத்திற்கு மருந்துகளை கொடுத்துவிட்டு, அவர்களின் கடவுள் அவர்களைக் குணப்படுத்தவில்லை, எனவே அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று வற்புறுத்தி மதமாற்றம் செய்தார். இந்த வழக்கில் 7 பேரை காவதுறையினர் கைது செய்துள்ளனர்.
மான் சிங் என்ற பழங்குடி ஹிந்துவான இவர், ஒரு வருடத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டார். பலமுறை சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்த நேரத்தில், தார் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர், ஜாபுவா மாவட்டத்தின் சாப்ரி கிராமத்தில் உள்ள சர்ச் ஒன்றில் சிகிச்சை பெற அவருக்கு ஆலோசனை கூறினார். இதனால், மான் சிங் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றார். அங்கு பாதிரி ரெசிங், மான் சிங்கிற்கு சிறிது தண்ணீரும் சில மருந்துகளையும் கொடுத்தார். சிகிச்சைக்குப் பிறகு, மான் சிங் தனது கிராமத்துக்கு திரும்பினார். இதற்குப் பிறகு, பாதிரி ரெசிங், மான் சிங்கின் வீட்டிற்கு அடிக்கடி செல்லத் தொடங்கினார், மருந்துகளை கொடுத்தார். இதனிடையே மான் சிங் பூரண குணமடைந்தார். உடனே, அவரை மதம் மாறச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தார் பாதிரி ரெசிங். மான் சிங்கிடம், உங்கள் கடவுள் உங்களை குணமாக்கவில்லை. எங்கள் கடவுள் உங்களைக் குணப்படுத்தினார். எனவே இப்போது நீங்கள் ஒரு கிறிஸ்தவராக மாறுகிறீர்கள். உங்கள் கடவுள் சக்தி குறைந்தவர். கிறிஸ்தவத்தின் கடவுளால் நீங்கள் குணமடைந்தீர்கள்” என கூறியதுடன் மான் சிங்கின் வீட்டில் இருந்த ஹிந்து தெய்வங்களின் புகைப்படங்களையும் பாதிரி தூக்கி எறிந்தார். அவருக்குப் சில புத்தகங்களையும் சிறிதளவு பணத்தையும் கொடுத்து ஆசைக்காட்டினார். கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல வசதிகள் இலவசமாக கிடைக்கும் என்று கூறி மூளை சலவை செய்தார்.
பின்னர் கடந்த ஜனவரி 23 அன்று, பாதிரி ரெசிங் தனது மனைவி, மகன் மற்றும் சிலருடன் மான் சிங்கின் வீட்டிற்கு சென்றார். கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தினார். பின்னர் ஒரு மதப் புத்தகத்தை எடுத்து அதிலிருந்து சில பகுதிகளை படித்து மான் சிங் மீது தண்ணீரைத் தெளித்தார். பின்னர், ‘இப்போது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கிறிஸ்தவராக மாறிவிட்டீர்கள்’ என்றார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஹிந்து அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள்ர், மான் சிங்கையும் பாதிரியையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பாதிரி மற்றும் உடன் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். மான் சிங்கின் புகாரின் பேரில், பாஸ்டர் ரெசிங், அவரது மனைவி உம்லி, அவரது மகன் கெம்ராஜ், அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது க்ஷிப்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.