அண்மையில் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள 8215 இடங்களில் 7717 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பா.ஜ.க 6062 இடங்களை கைப்பற்றியுள்ளது. மாவட்ட சபை தேர்தலில் மொத்தமுள்ள 242 இடங்களில் 228 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பா.ஜ.க 179 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இடாநகர் மாநகராட்சி தேர்தலில் 20 இடங்களில் 10 இடங்களை பா.ஜ.க கைப்பற்றியுள்ளது. இங்கு 70 சதவீத மக்கள் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜம்மு காஷ்மீரிலும் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது பா.ஜ.க. இவை, பா.ஜ.கவை மதவாத கட்சியாக காட்ட முயற்சிப்பவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.