அமெரிக்காவில் முகமது நபியைப் பற்றிய திரைப்படம் வெளியானால், மவுன்ட் ரோட்டில் போராட்டத்தை நடத்தியவர்கள், கர்நாடாகவில் கர்புகி கொலையை கண்டித்த இஸ்லாமிய தலைவர்கள், பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளில் 33 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது பற்றி வாய் திறக்க கூட எவரும் முன் வரவில்லை. இந்தியாவில் கருத்து சுதந்திரம் , ஊடக சுதந்திரம் என முழக்கமிடும், அரசியல்வாதிகள் கூட வாய் திறக்க முடியவில்லை. காரணம் பத்திரிக்கையாளர்கள் மீது உள்ள பாசம் கிடையாது. இந்துத்துவவாதிகளுக்க எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு கிடையாது. உண்மையில் பாகிஸ்தானில் கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதையும் சற்றே விரிவாக பார்க்கலாம்.
கொலையானவர்களின் பட்டியலில் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியில் பணியாற்றியவர்கள். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதமான பத்திரிக்கையாளர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக யூனஸ்கோ அறிவித்துள்ளது. ஹாங்காங் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஊடகத்தில் பணியாற்றும் சலீம் ஷாஜாத் என்ற பத்திரிக்கையாளர் இஸ்லாமாபாத்தில் உள்ள சிலரை பேட்டி எடுத்த சில தினங்களில் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் உள்ள அதிகாரிகளுக்கு பயங்கரவாத அமைப்பான அல் காயிதாவுடன் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டு சில அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டார். மேலும் Inside Al-Qaeda and the Taliban; Beyond Bin Laden and 9/11 என்ற புத்தகத்தில் ஐ.எஸ்.ஐ.யின் தொடர்பு பற்றியும் எழுதிய காரணத்தால், ஐ.எஸ்.ஐ. உதவியுடன் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பினர் குற்றச்சாட்டை வைத்தார்கள்.
இந்த கொலை பாகிஸ்தானிய உளவு அமைப்புகளால் செய்யப்பட்டது முந்தைய பத்திரிக்கையாளர்களின் கொலைகளிலும் கானப்பட்ட அனைத்து அடையாளங்களையும் கொண்டுள்ளது” என்று தெற்காசியாவில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அலி தயான் ஹசன் தெரிவித்தார். அவர் “வெளிப்படையான விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு” அழைப்பு விடுத்தார். கட்டுரையில் பெயரிடப்பட்ட இரண்டு ஐ.எஸ்.ஐ அதிகாரிகள், ரியர் அட்மிரல் அட்னான் நசீர் மற்றும் கொமடோர் காலித் பெர்வைஸ் ஆகியோர் கடற்படை அதிகாரிகள். “பயங்கரவாத ஹிட்லிஸ்ட்டில்” உங்களைக் காணலாம் என்று பத்திரிகையாளரை நசீர் எச்சரித்ததாக கொலை செய்யப்படும் முன் ஷாஜாத் கூறினார். “
ஒவ்வொரு வருடம் நவம்பார் மாதம் 2ந் தேதி International Day to End Impunity for Crimes against Journalists என்ற தினத்தில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானில் 2013 முதல் 2019 வரை கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 33. வழக்கு பதிவு செய்தது 32, ஆனால் விசாரனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது 20. முழு விசாரனைக்கு பின்னர் ஆறு வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை பெற்றவர்களில் பாதி பேர்கள் மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டார்கள். 2018-2019-ல் ஏழு பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தாலும், நான்கு வழக்கு மட்டுமே விசாரனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொலைகள் மிகவும் கொடூரமான புள்ளிவிவரம் – இன்னும் பல ஊடகவியலாளர்கள் அதே காலகட்டத்தில் மிரட்டல், அச்சுறுத்தல், துன்புறுத்தல், கடத்தல், சித்திரவதை அல்லது படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில், குறிப்பாக பலூசிஸ்தான் மாகாணத்தில், தலிபான், லஷ்கர்-இ-ஜாங்வி மற்றும் பலூசிஸ்தான் இன ஆயுதக் குழுக்கள் வெளிப்படையாகவே பத்திரிக்கையாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. துஷ்பிரயோகங்களை முன்னிலைப்படுத்த முயன்றதற்காக அல்லது அவர்களின் சித்தாந்தத்தை ஊக்குவிக்காததற்கு பதிலடியாக பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச பொது மன்னிப்பு மையம் (Amnesty International ) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் பயத்துடனேயே பத்திரிக்கையாளர்கள் தங்கள் பணிகளை செய்கிறார்கள். எப்பொழுது என்ன நேருமோ என்ற அச்சத்துடன் வாழ்வதாகவும், பல சமயங்களில் ராணுவத்தினரின் தாக்குதல்கள், கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் என கட்டுரைகள் எழுதிய காரணத்திற்காக 2008-ல் பல பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டார்கள். எக்ஸ்பிரஸ் டி.வி. மற்றும் எக்ஸ்பிரஸ் டெய்லி இதழின் பத்திரிக்கையாளர் முகமது இப்ராஹிம், தி வால் ஸ்டிரிட் ஜெர்னல் டேனியல் பெரில், கைபர் டி.வி . நிருபர் அல்லா நூர் போன்றவர்களும் படுகொலைக்கு உள்ளானார்கள். பத்திரிக்கையாளர்களை கொலை செய்தவர்கள் சுதந்திரமாக உலா வரும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலாவதாக இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தார்கள்.
விருது பெற்ற பத்திரிக்கையாளர் தாஹா சிததிக் என்பவர் ஜனவரி மாதம் 10ந் தேதி 2018-ல் கொலை வெறி தாக்குதலிருந்து தப்பித்து பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். இவர் தனது இணைத் தளமாக safemewsrooms.org. -ல் பாகிஸ்தானில் ராணுவத்தின் பிடியில் அரசாங்கம் இருப்பததையும், ராணுவத்தை ஐ.எஸ்.ஐ. ஆட்டிப்படைப்பதையும் விவரமாக எழுதிய காரணத்தில் கொலை வெறி தாக்கதலுக்குள்ளானார்.
அரசாங்கமே, அரசுக்கு எதிராக கருத்துக்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை விரும்பாபமல், ஜனநாயக போர்வையில், சர்வாதிகாரமாக கொலைக் கருவியை கையில் எடுத்துள்ள பாகிஸ்தானுக்கு ஆதரவாக தான் பாரத தேசத்தில் பல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் நான்கவாது தூண் என வர்னிக்கப்படும் எழுத்து சுதந்திரம் பாகிஸ்தானில் பாடதபாடு படுகிறது.