தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்காக குளோபல் கோல் கீப்பர் பில் கேட்ஸ் நிறுவனம் நரேந்திரமோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு.
பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்காவில் உள்ள பில் கேட்ஸ் நிறுவனம் தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்வதேச விருதான குளோபல் கோல் கீப்பர் விருதைஅந்நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் வழங்கி கவுரவித்தார் அதை்பெற்றுக்கொண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி தூய்மையான இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவு இப்போது நனவாகியுள்ளது. தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் மூலம் மூன்று லட்சம் இந்தியர்கள் நோயின் பதிப்பில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்திஜியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நாளில் இந்த விருதை பெறுவதில் தனிப்பட்ட முறையிலும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.130 கோடி இந்தியர்களும் எடுத்துக்கொண்ட உறுதியினால் முயற்சியினால் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது