பழமையான கோயில் இடிப்பு

ராஜஸ்தான், அல்வார் மாவட்டத்தில்  உள்ள ராஜ்கரில் சாலை விஸ்தரிப்பு என காரணம் காட்டி 300 வருட பழமையான சிவன் கோயில் ஒன்று புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டது. மேலும் அங்கிருக்கும் 150க்கும் மேற்பட்ட வீடுகள் முறையான அறிவிப்பின்றி இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. கோயில் இடிக்கப்பட்டதில், கோயிலில் இருந்த பழமையான சிலைகள் சேதம் அடைந்துள்ளன. மூலவரான சிவலிங்கம் டிரில்லர் இயந்திரம் மூலம் பிடுங்கப்பட்டது. இதற்கு உள்ளூர் மக்கள் கடுமையான விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர். டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த சட்டவிரோத கட்ட்டங்கள் இடிப்பு நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே, ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசு இந்த கோயில் இடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக அம்மாநில பா.ஜ.கவினரும் ஹிந்து அமைப்புகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.