முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ராவின் மனைவியான சீமா பத்ரா மீது, தனது வீட்டில் பணிசெய்யும் பழங்குடியின பணிப்பெண்ணான சுனிதாவை நாக்கினால் கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக எழுந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று, ராஞ்சியில் உள்ள அசோக்நகரில் உள்ள சீமா பத்ராவின் வீட்டில் இருந்து சுனிதாவை காவலர்கள் மீட்டனர். அப்போது வீட்டில் சுனிதா ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். உணவு, தண்ணீர் கூட சரியாக வழங்கப்படவில்லை. இதனால் அவரால் பேசகூட முடியவில்லை என்பதை காவலர்கள் கண்டறிந்தனர்தற்போது, ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சுனிதா சிகிச்சை பெற்று வருகிறார். பணிப்பெண் சுனிதா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். கும்லாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். ஜார்க்கண்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் மகேஷ்வர் பத்ரா மற்றும் சீமா பத்ரா ஆகியோரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார். பணிபுரியும் போது அடிக்கடி துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டபோதெல்லாம் அடிக்கப்பட்டு அறையில் அடைக்கப்பட்டார், சூடு வைக்கப்பட்டார். சீமா பத்ரா, பா.ஜ.கவில் சேர்வதற்கு முன்பு காங்கிரஸில் பணிபுரிந்த ஒரு அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.