” அயோத்தி ராமர் கோயிலில் நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்சி, பல ஆண்டுகளாக நம் நினைவுகளில் நிலைத்து நிற்கும்” என வீடியோ ஒன்றை எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டு, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோயிலில் (ஜன.,22) ராமர் பிரதிஷ்டை விழா நடந்தது. கடும் விரதம் இருந்து, பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார். விமரிசையாக நடந்தேறிய பால ராமர் பிராண பிரதிஷ்டையைத் தொடர்ந்து, ராமர் கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு மலர் துாவி வாழ்த்தினார் பிரதமர்.
இந்நிலையில், (23/1/24)பிராண பிரதிஷ்டா’ விழாவின் தருணங்களை நினைவு கூரும் வகையில், வீடியோ ஒன்றை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ” ஆயிரக்கணக்கான மக்கள் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் இட்டு, ராமரின் மீதான அன்பினை வெளிப்படுத்தினர். ஹெலிகாப்டர் மூலம் கோயிலின் மீது மலர் மழை பொழியப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
மேலும் அயோத்தி ராமர் கோயிலில் நடந்த பிராண பிரதிஷ்டை நிகழ்சி, பல ஆண்டுகளாக நம் நினைவுகளில் நிலைத்து நிற்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.