- மனிதகுலச் சிக்கல்களுக்கு பெரிதும் வழிகாட்டுவது திருக்குறளா? மார்க்சியமா? -மூ. பாண்டியன், திருவானைக்காவல்
மார்க்சியம் (கம்யூனிசம்) தோன்றிய மண்ணிலேயே தோற்றுப் போய்விட்டது. திருக்குறள் மட்டுமே எல்லாச் சிக்கல்களுக்கும் வழி காட்டுகிறது.
- இரவில் கீரை சாப்பிடக் கூடாது என்பது ஏன்? – வே. சுனில்குமார், திருப்பூர்
கீரை எளிதில் ஜீரணம் ஆகாது என்பதால். இரவில் கீரை மட்டுமல்ல, தயிர், இஞ்சி, பாகற்காய், நெல்லிக்காய் போன்றவைகளையும் சேர்க்கக் கூடாது.
- பகைவனைக் கொல் என்கிறது பகவத்கீதை. இது சரிதானா? – எஸ். அன்பரசன், மயிலூடுதுறை
தர்மம் காக்க அதர்மம் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் நியதி. நெருப்பு, நோய், பகை, கடன் போன்றவைகளை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்கிறது ஒரு சுலோகம்.
- சிலர் மனைவியை அடிமை போல நடத்துவது பற்றி? – ம. முனுசாமி, சேலம்
‘‘பெண்ணை அழ வைக்காதே. இறைவன் அவள் கண்ணீரை அளந்து பார்ப்பான்”- ஒரு பழமொழி.
- போட்டியிடும் அனைவருமே அயோக்கியர்கள். அதனால்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கிறேன் என்று கூறுபவர்கள் பற்றி? – மி. மயில்சாமி, திருச்செங்கோடு
வேட்பாளர்களில் மோசமானவர், மிகவும் மோசமானவர் என்பதைப் பார்த்து, இருப்பதில் சுமாரானவருக்கு வாக்களிப்பதுதான் சரியானது. நீங்கள் நோட்டாவுக்கு வாக்களித்தால் மிகவும் மோசமானவர் வெற்றி பெற அது வாய்ப்பு அளித்துவிடும். ஜாக்கிரதை.
- திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி? – சி. சூரியகுமார், திருநல்லாறு
திமுக கூட்டணிக்குப் பெயர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா? கட்சி பெயரிலேயே மதம் உள்ளதே! ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்.
- திமுக கூட்டணிக்குப் பெயர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா?
கட்சி பெயரிலேயே மதம் உள்ளதே! ராமநாதபுரம் தொகுதி வாக்காளர்கள் இம்முறை ஏமாற மாட்டார்கள்.
- ‘மிஷன் சக்தி’ பற்றி? – சூ. ஏகாம்பரம், திண்டிவனம்
இதுவும் விண்வெளியில் நடந்த ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக்தான். நாடே பெருமைப்பட வேண்டிய விஷயம். விஞ்ஞானிகளுக்கு ஒரு சல்யூட், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்னொரு சல்யூட்.