பயங்கரவாதிகள் அடிக்கும் கொட்டம் மதத்தின் பேரால் வக்கிர திட்டம்

கடந்த வாரம் அமெரிக்காவின் ஓர்லேண்டோவில் ‘பல்ஸ் நடன கிளப்’பில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேளிக்கையில் ஈடுபட்டிருந்த 49 இளம் அமெரிக்கர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான் ஓமர் மதீன் என்கிற 29 வயது இளைஞன்.

இந்த கொலைக்குக் காரணம், அந்த கிளப்பில் ஆட்டம் போட்டவர்கள் ‘ஓரின சேர்க்கையாளர்கள்’. அது ஓமருக்கு பிடிக்கவில்லை என்று ஓமரின் தந்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எப்போதும் போல அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் இதற்கு கண்டனங்கள். இதில் முக்கியமானது தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் ஜனநாயக, குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் கண்டனங்கள் தான். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் சரி, தற்போதைய ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் சரி, மிகவும் மெல்லிய கண்டனத்தை தெரிவித்தனர். ஓமர் மதீனின் 5 முகநூல் கணக்கில் அவன் தெரிவித்த கருத்துக்களை முகநூல் இணையதளம் இப்போது வெளியிட்டு இருக்கிறது. ஐஎஸ் என்ற இஸ்லாமிக் ஸ்டேட் மீது தாக்குதல் நடத்துவதை, அமெரிக்காவும் ரஷ்யாவும் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஓமர் மதீன் எழுதியுள்ளான்.

ஓமர் மதீனின் இந்த கருத்துக்கள் வெளியே தெரியும் முன்பே, குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் இந்த தாக்குதலை முஸ்லிம் மதவாத தாக்குதல், பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவிலும் ஓட்டு வங்கி அரசியல் தலை விரித்தாடுகிறது போலும்! ஓமர் மதீனின் தாக்குதலை பூசி மெழுகிய ஜனநாயக கட்சிக்கு  குடியரசு கட்சி சாட்டை அடி கொடுத்தது.

அமெரிக்காவில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை கடுமையாக சாடும் ஒரு கட்சியும் பூசி மெழுகும் கட்சியும் இந்தியாவைப் போலவே இருக்கிறது!TRAM-OBAMA

வங்கதேசம் டாக்கா தலைநகரத்திலுள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமத்திற்கு ஒரு

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஏபி. சித்திக் என்பவனிடமிருந்து வந்த கடிதம்.

வங்கதேசம் ஒரு இஸ்லாமிய நாடு. இங்கு உங்கள் மதத்தை அனுசரிக்க உங்களுக்கு உரிமை இல்லை. இதை நீங்கள் தொடர்ந்தால் கொடூரமாக கொலை செய்யப்படுவீர்கள்” என்பது தான் அதன் வாசகம்.

இதற்கு முந்தைய வாரம் ஹிந்து கோயிலுக்குள் புகுந்து சிலைகளை உடைப்பதும் பூசாரியை வெட்டிக் கொல்வதையும் செய்திருக்கிறார் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்.

***

உத்தரப் பிரதேச மாநிலம் கைரானா தொகுதியில் 2014லிலிருந்து இதுவரை 600 ஹிந்து குடும்பங்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்டிருக்கின்றன.

அது முஸ்லிம் மெஜாரிட்டி உள்ள பகுதி. அங்கு சமாஜ்வாதி கட்சியின் தயவில் முஸ்லிம்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஔரங்கசீப் விதித்த ஜிசியா வரிபோல உயிர் பாதுகாப்பு வரி என ஒவ்வொரு ஹிந்துவிடமிருந்தும் முஸ்லிம் குழுக்கள் வசூலித்து வருகின்றன.

இந்த மாதம் ஹிந்துப் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சங்கர், ராஜூ என்கிற ஹிந்து வியாபாரிகள் பாதுகாப்பு வரி கொடுக்காததால் முகிம் காலா என்கிற பயங்கரவாத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

***

அமெரிக்க ஓர்லாண்டோ கொலைகளில்

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் வேர் எப்படி அமெரிக்காவிற்குள் ஊடுருவுகிறது என்பது, எப்படி அமெரிக்க இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு, அதன் அடிமைகளாகி, கொலைகளை அரங்கேற்றுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

அதைவிட, பயங்கரவாதத்திற்கு மதம் அரணாக, பாதுகாப்பாக இருக்கிறது என்பதும் ஒட்டு மொத்தமாக ஓட்டு போடுவதால் அமெரிக்கா கூட அவர்களை தாஜா செய்கிறது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

வங்கதேசம் ராமகிருஷ்ண மடத்தின் மீதான கொலை மிரட்டல், ஆச்சரியமில்லைதான். இஸ்லாமிய நாடுகளில் வேறு மதங்கள் பூண்டோடு அழிக்கப்படும் என்பது யாரும் அறிந்ததே. ஆனால் இதற்கு கண்டனம் தெரிவிக்க கருத்து தெரிவிக்க, மதசார்பற்றவர்களும், கடவுள் மறுப்பாளர் கூட, ஏன் முயலவில்லை? பயமா? இல்லை போலி மதசார்பின்மையா?

மதசார்பற்ற இந்தியாவில், உ.பியில் ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையிலேயே மதசார்பற்ற தன்மைக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்.

ஹிந்து என்றால், அநாதை, நாதியற்றவன், இளிச்சவாயன், அவன் கையில் ஓட்டுக்குவியல் இல்லை. எனவே அவனைக் கண்டுகொள்ள வேண்டாம் என்பது கைரானா விஷயத்தில் கண்டுகொண்ட உண்மை!

மோடி அரசு உடனடியாக உ.பி. அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாத்ரிக்கு குரல் எழுப்பிய மதசார்பற்ற பத்திரிகைகள் கைரானாவுக்கு குரல் ஏன் எழுப்பவில்லை?

அமெரிக்காவும் பங்களாதேஷும், உ.பியும் வளர்ந்து வரும் மதத் தீவிரவாதத்திற்கு கண் கூடான உதாரணங்கள்!